மருத்துவ குறிப்பு

மாதவிடாய் நாட்களில் மனைவியிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்???

14 1457948848 8howtoreactwhenyourpartnerisinperiodமாதவிடாய் என்பது வயதுக்கு வந்ததில் இருந்து நாற்பத்தைந்து அல்லது ஐம்பது வரை பெண்களுக்கு மாதமாதம் ஏற்படக் கூடிய சுழற்சி முறை நிகழ்வு. மூன்றில் இருந்து ஐந்து நாட்கள் வரை இது நீடிக்கலாம். இந்த நாட்கள் பெண்களின் வாழ்க்கையில் மிகவும் வலிமிகுந்த நாட்களாகும்.

சில நிபுணர்கள் மாதவிடாய் நாட்களில் உடலுறவில் ஈடுபடலாம் என கூறுவார்கள். பாதுகாப்புடன் ஈடுபடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை எனிலும், அந்த வலிமிகுந்த நாட்களில் அவர்களை வற்புறுத்துவது உறவில் ஈடுபட அழைப்பது தவறு.

இதுபோல மாதவிடாய் நாட்களில் மனையிடம் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும், நடந்து கொள்ள கூடாது என ஆண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

கோபம்
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு கோபம் சற்று அதிகமாக வரும். அதற்கு காரணம் அவர்கள் தாங்கிக் கொண்டிருக்கும் அந்த வலி. எனவே, மாதவிடாய் நாட்களில் மனைவி கோபப்பட்டால் பொறுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வேண்டுமென்று அவ்வாறு கோபமடைவதில்லை.

உடலுறவு
மாதவிடாய் நாட்களில் உடலுறவில் ஈடுபடுவது தவறில்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், அந்த வலி மிகுந்த நாட்களில் அவர்களை உறவில் ஈடுபட அழைக்கவோ / வற்புறுத்தவோ வேண்டாம்.

வேலை
மாதவிடாய் நாட்களில் அவர்கள் வேலை சரியாக செய்யவில்லை என ஆண்கள் கோபப்பட வேண்டாம். இது உடலளவில் சோர்ந்து போயிருக்கும் அவர்களின் மனதையும் சோர்வடைய செய்யும்.

உறுதுணை
முடிந்த வரை உங்கள் மனைவிக்கு உதவி செய்யுங்கள். சிலருக்கு அந்த நாட்களில் இடுப்பு மிகவும் வலியெடுக்கும். நீங்களாக கேட்டு பிடித்துவிடலாம். அவர்களால் அதிகம் அலைய முடியாது என்பதால், மார்கெட் சென்று வருவது போன்ற வேலைகளை நீங்கள் செய்யலாம்.

அழைப்பு
அலுவலகம் சென்றாலும், அவர்கள் நன்றாக இருக்கிறார்களா? வலி மிகுதியாக இருக்கிறதா என அவ்வப்போது கால் செய்து விசாரிக்க தவற வேண்டாம். இது அவர்களுக்கு ஆறுதலாகவும் இருக்கும்.

ஓய்வு
மாதவிடாய் நாட்களில் உங்கள் மனைவியை ஓய்வெடுக்க கூறுங்கள், அதிகபட்சம் முதல் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தான் வலி அதிகமாக இருக்கும் என்பதால் அன்றைய தினம் நீங்கள் உணவு சமைக்கலாம் அல்லது ஹோட்டலில் வாங்கி வரலாம்.

பிரச்சனை
என்றோ செய்த அல்லது மறந்தவை பற்றி மாதவிடாய் நாளன்று கேள்வி கேட்டு அவர்களை கடுப்பேற்ற வேண்டாம். கண்டிப்பாக இதற்கு பதில் கிடைக்காது, சண்டை தான் வரும்.

திட்டுவது
நல்ல நாள், நல்ல காரியம் இன்று பொய் இப்படி மாதவிடாய் என்று கூறுகிறாயே. உருப்படுமா. என பல வீடுகளில் கோபத்தை வெளிக்காட்டி திட்டுவதுண்டு. மாதவிடாய் என்பது ஒவ்வொரு மாதமும் நடக்கும் இயற்கையான நிகழ்வு. இதை தடுக்க முடியாது. எனவே, ஏற்கனவே வலியில் இருக்கும் அவர்களை வார்த்தைகளால் துன்புறுத்த வேண்டாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button