Other News

நட்சத்திரத்த சொல்லுங்க…வாழ்க்கை ரகசியத்தை நாங்க சொல்லுறம்..!

ஒருவரின் வெற்றியில் அவரின் தனிப்பட்ட குணம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் வெறும் முயற்சியும், அதிர்ஷ்டமும் ஒருபோதும் வெற்றிக்கு வழிவகுக்காது, அனைத்திற்கும் அடிப்படை ஒழுக்கமாகும். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவமான குணம் இருக்கும், அதுதான் அவர்கள் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை நிர்ணயிக்கிறது. இந்த குணம் அவர்களின் பிறப்பிலேயே தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.

ஜோதிடத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவருக்குமே ராசிகளின் மீதும், நட்சத்திரங்களின் மீதும் நம்பிக்கை இருக்கும். நம்முடைய பிறந்த ராசி எப்படி நமது தலையெழுத்தை தீர்மானிப்பதில் முக்கிய இடத்தை வகிக்கிறதோ, அதேபோல நம்முடைய நட்சத்திரமும் முக்கிய இடத்தை வகிக்கிறது.

சிலசமயம் ஒரே ராசியில் பிறந்திருந்தாலும் சிலருடைய குணங்களும், வாழ்க்கை முறையும் மாறுபட்டிருக்கும். அதற்கு காரணம் அவர்களின் பிறந்த நட்சத்திரம்தான். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனிப்பட்ட கடவுளும், தனிப்பட்ட குணமும் இருக்கும். இந்த பதிவில் அனைத்து நட்சத்திரங்களுக்குமான தனித்துவமான குணம் என்னவென்று பார்க்கலாம்.
.
அஸ்வினி

அதிக சுறுசுறுப்பும், ஆற்றலும்தான் இவர்களின் சிறப்பான குணமாகும். மேலும் இவர்கள் எப்பொழுதும் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். இதனை இவர்காலின் பிரச்சினை என்று கூட சொல்லலாம். ஏனெனில் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்றே சிந்தித்து கொண்டிருப்பார்கள். தங்கள் இடத்தை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்திருப்பதிலேயே அதிக நேரத்தை செலவழிப்பார்க்ள்.

பரணி

” பரணியில் பிறந்தால் தரணி ஆளலாம் ” என்று கூறுவார்கள். அதற்கு முக்கிய காரணம் இவர்களின் இரக்கமற்ற குணம்தான். தன்னை பற்றியும், தான் சார்நத நலன் பற்றியும் மட்டும்தான் இவர்களின் சிந்தனை எப்பொழுதும் இருக்கும். இவர்களுக்கு தண்ணீர் மீது ஒருவித பயம் இருக்கலாம் எப்போதும் எதிர்காலத்தை பற்றியே சிந்தித்து கொண்டிருப்பார்கள். மற்றவர்களிடம் கெஞ்சுவது என்பது இவர்களுக்கு பிடிக்காத ஒன்றாகும். வதந்திகளை பரப்புவதில் இவர்கள் கில்லாடிகள்.

கார்த்திகை

புத்திக்கூர்மைதான் இவர்களின் ஆயுதம், அதைவைத்து இவர்கள் மற்றவர்களை படுத்தும் பாடு அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். மற்றவர்களுடன் சுமூகமான உறவை எப்போதும் கொண்டிருக்க மாட்டார்கள்,அது நண்பர்களாக இருந்தாலும் சரி, உறவினர்களாக இருந்தாலும் சரி.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

ரோகினி

இவர்கள் பெரும்பாலும் மதநம்பிக்கைகளில் பின்தங்கியவராக இருப்பார்கள், அதன் மூலம் வருமானம் ஈடுபவர்களாக கூட இருக்கலாம். மற்றவர்களை பற்றி குறை கூற இவர்கள் கொஞ்சம் கூட தயங்க மாட்டார்கள். இதுவே அவர்களை மற்றவர்களுக்கு பிடிக்காமல் போக முக்கிய காரணமாகும். தன்னிடம் இருக்கும் செல்வத்தை பிறரிடம் காண்பிப்பதில் இவர்களுக்கு அலாதி ஆர்வம் உண்டு.

மிருகசீரிஷம்

இவர்களின் வசீகரமும், பொறுமையும் அனைவருக்கும் பிடித்தவர்களாக இவரை மாற்றும். ஆனால் இவர்கள் எப்பொழுதும் நிதி நெருக்கடியில் இருந்து கொண்டே இருப்பார்கள், அதனை வெளிக்காட்டவும் கொள்ள மாட்டார்கள்.

திருவாதிரை

இவர்கள் தன்னை சுற்றி இருப்பவர்களிடம் இருந்து எப்பொழுதும் விலகியே இருப்பார்கள், இதனால் அவர்கள் வாழக்கையில் பலவற்றை இழக்கிறார்கள். எப்போதும் பணத்தை பற்றி கவலைப்படுவதும், எப்படி பணம் சம்பாதிப்பது என்பதை பற்றியுமே சிந்திப்பதால்தான் இவர்கள் எப்போதும் மற்றவர்களிடம் இருந்து விலகியே இருக்கிறார்கள்.

புனர்பூசம்

இவர்களின் இயற்கை குணத்தாலேயே இவர்களை சுற்றி எப்பொழுதும் நண்பர்கள் சூழ்ந்திருப்பார்கள். தன்னுடைய அறிவை எப்பொழுதும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் குணம் கொண்ட இவர்கள் ஒருபோதும் தோல்விகளால் துவண்டு விடமாட்டார்கள். அதீத நட்புணர்வுடனும், அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணமும்தான் இவர்களின் மிகப்பெரிய பிரச்சினையாகும்.

பூசம்

பெற்றோர்களுக்கு கீழ்ப்படிவதும், கடவுள் நம்பிக்கையும் இவர்களின் சிறந்த குணங்களாகும். சட்டங்களை மதிக்காமல் நடப்பவர்கள் மற்றும் மற்றவர்களை விட தன்னை உயர்வாக நினைப்பவர்களை இவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். அவர்களுடன் பிரச்சினைகளில் கூட ஏற்படுவார்கள்.

ஆயில்யம்

இவர்களுக்கு பயணம் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும் தேவையே இல்லை என்றால் கூட நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தேவைக்காக இவர்கள் பயணம் செய்வதை வாடிக்கையாக கொண்டவர்கள். தங்களின் தனிப்பட்ட தீய எண்ணங்களுக்காக பணத்தை செலவு செய்ய இவர்கள் தயங்கவே மாட்டார்கள்.

மகம்

இவர்கள் எப்பொழுதும் நாளை என்பதே இல்லை என்ற உணர்வுடன் வாழ்பவர்கள், கடவுள் மீது அதிக பயம் கொண்டவர்கள். மற்றவர்களின் பணம் மற்றும் நம்பிக்கையை ஒருபோதும் ஏமாற்றமாட்டார்கள். எந்த காரியத்தை செய்வதாக இருந்தாலும் இவர்களுக்கு மற்றவர்களின் துணை தேவை, எப்போதும் சுதந்திரமாக செயல்பட மாட்டார்கள்.

பூரம்

இவர்கள் புத்திசாலிகள் ஆனால் தந்திரமானவர்கள் அல்ல, மற்றவர்களுடன் எப்பொழுதும் கடுமையாகத்தான் பேசுவார்கள். நம்பமுடியாத அளவிற்கு இவர்கள் நேர்மையாக இருப்பார்கள், தீயசெயல்களில் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள்.

உத்திரம்

தானம் செய்ய அதிகம் விரும்பும் இவர்களின் சிறப்பே அவர்களின் அன்பான குணம்தான். இதுவே அவர்களுக்கான அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் பெற்றுத்தரும். தொழில்களில் எப்பொழுதும் இவர்கள் வெற்றிக்கொடி நாட்டுவார்கள்.

அஸ்தம்

இவர்கள் கடவுள் நம்பிக்கை மற்றும் மதப்பற்று மிக்கவர்கள், மற்றவர்களிடம் இருந்து எதையாவது கற்றுக்கொண்டே இருப்பார்கள். பயணம் செய்வது தொடர்பான வேலைகளில் ஈடுபட அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

சித்திரை

இவர்கள் எப்போதும் தங்கள் எதிரிகளை நினைத்து கவலைப்படுவார்கள். தனது நலனுக்காக தந்திரத்தை எப்போது, எப்படி கையாள வேண்டும் என்று நன்கு தெரிந்தவர்கள். வாழ்நாள் முழுவதும் இவர்களுக்கு அறிவின் மீதான தாகம் இருந்துகொண்டே இருக்கும்.

ஸ்வாதி

இவர்களின் ஆற்றலையும், திறமையையும் சரியாக வழிநடத்தா விட்டால் இவர்கள் பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடியவர்கள். பிறவியிலேயே இவர்கள் அதிகம் பேசக்கூடியவர்கள், இதனால் சிலசமயம் பிரச்சினைகளில் கூட சிக்கிக்கொள்வார்கள்.

விசாகம்

இவர்களின் முயற்சிகளுக்கு எப்போதும் தாமதமாகவே முடிவுகள் கிடைக்கும். நிரந்தர மகிழ்ச்சியை பெரிதாக நினைப்பதால் தற்காலிக மகிழ்ச்சிகளுக்கு இவர்கள் முக்கியத்துவம் கொடுக்கமாட்டார்கள். வெளிக்காட்டி கொள்ளாவிட்டாலும் மற்றவர்களின் வெற்றி இவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தும். இவர்கள் எப்பொழுதும் தனிமையை விரும்புவார்கள், அதனால் பல மகிழ்ச்சிகளை இழக்கிறார்கள்.

அனுஷம்

அதிக உணர்ச்சிவசபடுவதாலேயே இவர்கள் வாழ்க்கையில் பல தடைகளை சந்திக்க நேரிடும். இவர்கள் தங்கள் பெற்றோருடனான உறவில் அவ்வளவு ஆர்வம் காட்டமாட்டார்கள். இவர்கள் ஆரோக்யத்தின் மீது அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.

கேட்டை

இவர்கள் பிறக்கும்போதே அதிக உடல் வலிமையுடனும், அழகான தோற்றத்துடனும் பிறந்தவர்கள் ஆவர். இவர்கள் கவனத்தை ஒருநிலை படுத்த வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இவர்கள் அடிக்கடி தங்கள் துறையை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.

மூலம்

தங்கள் வாழ்க்கை அனுபவம் மூலம் கிடைத்த அறிவின் மூலம் இவர்கள் வெற்றிகரமான மற்றும் வசதியான வாழ்க்கையை வாழ்வார்கள். இவர்கள் எப்பொழுதும் அமைதியை விரும்புபவர்கள் ஆனால் இவர்களின் அமைதியான வாழ்விற்கு பிரச்சினை வரும்போது இவர்கள் வன்முறையை கையிலெடுப்பார்கள்.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”இதையும் படிங்க” background=”” border=”” thumbright=”no” number=”3″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] பூராடம்

இவர்கள் வேண்டுமென்றே மற்றவர்களுடன் வாக்குவாதங்களில் ஈடுபட்டு அதில் வெற்றியடைந்து தன் புத்திசாலித்தனத்தை காட்ட விரும்புவார்கள். சரியான முடிவெடுக்க இவர்கள் எப்போதும் தடுமாறுவார்கள்.

உத்திராடம்

இவர்கள் கடுமையான உழைப்பாளிகள் ஆனால் ஆர்வத்தை இழந்து விட்டால் இவர்கள் சோம்பேறிகளாக மாறிவிடுவார்கள், அதனால் தொடங்கிய வேலையை கூட நிறுத்தி விடுவார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களை எளிதில் நம்பிவிட மாட்டார்கள்.

திருவோணம்

புனித நூல்களில் அதிக ஆர்வம் உள்ள இவர்கள் தங்களின் பொறுமை மற்றும் அறிவு மூலம் எதிரிகளை எளிதில் அழித்து விடுவார்கள். இவர்கள் எப்பொழுதும் மற்றவர்களை விட தான் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டவர்கள் அதனால் மற்றவர்களின் உதவியையும், மரியாதையையும் அடிக்கடி இழப்பார்கள்.

அவிட்டம்

இவர்கள் மிகவும் கோபப்பட கூடியவர்கள், எதிரிகளை உடல் வலிமையால் நசுக்கி விடலாம் என்ற எண்ணம் கொண்டவர்கள். இவர்களுக்கு தாமதமான திருமணமோ அல்லது மகிழ்ச்சியில்லாத திருமண வாழ்க்கையோ அமைய வாய்ப்புள்ளது.

சதயம்

இவர்கள் எளிமையான , நேர்மையான வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள். இந்த ராசியில் பிறந்தவர்கள் தைரியம் மிக்கவர்களாகவும், உலகத்தை பற்றி கவலைப்படுவதை காட்டிலும் தன்னுடைய சொந்த வாழ்க்கையை பற்றி கவலைப்படுவராகவும் இருப்பார்கள்.

பூரட்டாதி

உயர்ந்த காரணங்களுக்காகவும், உலகின் மாற்றத்திற்காகவும் எந்த தியாகத்தையும் செய்ய இவர்கள் தயங்கமாட்டார்கள். இவர்கள் தானம் என்று வரும்போது எதார்த்த வாழ்க்கையுடன் ஒத்துப்போக கூடியவர்கள். சூழ்நிலைக்கு தேவைப்பட்டால் தன்னை எப்படி வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்வார்கள்.

உத்திரட்டாதி

அறிவின் மீது அதிக நம்பிக்கை உடைய இவர்கள் அதனை பெறுவதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்கள். தன்னை விரும்புபவர்களுக்காக எதையும் தியாகம் செய்ய தயங்க மாட்டார்கள்.

ரேவதி

இவர்களுக்கு பிடிவாதம் மற்றும் கோபம் அதிகமாக இருக்கும். அனைத்தையும் விட இவர்கள் கடவுளுக்கு அதிகம் பயப்பட கூடியவர்கள், மற்றவர்களின் பிரச்சினைக்காக தன்னை வருத்திக் கொள்வார்கள்.-Source: boldsky

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button