மருத்துவ குறிப்பு

பெண்களின் வெள்ளை படுதலுக்கான-சித்த மருந்துகள்

பெண்களின் வெள்ளை படுதலுக்கான-சித்த மருந்துகள்
1.விஷமுட்டித்தைலம்
எட்டிக்கொட்டை பலம் 100
முசுமுசுக்கை 100 பலம்
நெய்ச்சிட்டி 100 பலம் சேர்த்து கியாழம் செய்து வடித்து
இளநீர்
வேப்பம்சாறு
எள்ளெண்ணையைச்
சமம் சேர்த்து பதமாக் காய்ச்சி ஒரு மண்டலம் தலை மூழ்கி வர வேண்டும்.

தீரும் நோய்கள்.
காய்ச்சல்
கிரந்தி
பெருஞ்சூலை
வெள்ளை
அரையாப்பு
கழல்வாதம் ஆகியன தீரும்.

2.செம்புச் செந்தூரம்
ஒரு பலம் சுத்தி செய்த செம்புப் பொடியை 32 நாட்களுக்குள்ளே
தாமரையிலைச் சாறு
கரந்தையிலைச் சாறு
சண்பகத்தின் சாறு
வேம்பின் சாறு

இவை ஒவ்வொன்றாலும் தனித்தனியே அரைத்து, வில்லை தட்டிக் கவசித்து
உலர்த்திப் புடமிடவும். அப்பொழுது செம்பு செம்பசுமை நிறச் செந்தூரமாகும்.

அளவும், அனுபானம்: இதனை 1 முதல் 2 குன்றி மணியளவில் கட்டுக் கொடிச் சாற்றில் வழங்கவும்.

தீரும் நோய்கள்: வெள்ளை என்னும் மேக நோய்கள் தீரும்.

3.

நாகப் பற்பம்
சுத்தி செய்த நாகம் அரை பலத்தைக்
குகையிலிட்டு உருக்கிக் கண் விட்டு ஆடும் போது சிற்றாமணக்கிலையைக் கசக்கி
ஐந்தாறு சொட்டுப் பிழியச் சத்தம் உண்டாகும். மறுபடியம் ஐந்தாறு சொட்டுப்
பிழியச் சத்தம் அடங்கும். மேற்படி நாகத்தின் மீது படும்படி துருத்தியால்
ஊதி, மறுபடியும் ஐந்தாறு சொட்டுப் பிழிந்து சிற்றாமணக்கின் வேரினால் கிண்ட
மல்லிகைப்பூப் போல் நிறமாகும்.

தீரும் நோய்: இதனை வெள்ளை வெட்டை முதலிய பிணிகளுக்கு வழங்கலாம். தாதுவிருத்தியும் உண்டாகும்.

மேகவெட்டைக் கடின வாத விரணம் என்ற நோயில் இம்மருந்தைக் குளிர்ந்த நீரில்
வேப்பெண்ணெயை அரைப்பங்கு கூட்டிக் கொடுத்து, மேல் பூச்சுக்கும் மேற்படிக்
கலவையையே உபயோகித்து, இலுப்பைப் பிண்ணாக்கு அரைத்துத் தேய்த்து வெந்நீர்
விட்டுச் சுத்தி செய்யவும்.

மேகவெட்டை வாத லலித விரணத்தில் இதைப் பனங்கள்ளில் தேங்காய் நெய்
சேர்த்துக் கொடுத்து, மேல் பூசி, தேய்த்துக் கழுவப் பயற்றையும்
வெந்நீரையும் உபயோகிக்கவும்.

பித்தக் கடின விரணத்திற்குக் காய்ச்சிய பட்டைச் சாரயமும் ஆமணக்கு
நெய்யும் அனுபானமாகும். தேய்த்துக் கழுவ சீக்கிரான் இலையை உபயோகித்து,
வெந்நீரும் இலுப்பை நெய்யும் பயன்படுத்தலாம். புளியிலை விட்டுக் காய்ச்சிய
நீரை உபயோகிக்கவும்.

கபக் கடின விரணத்தில் முந்திரிப் பழச் சாறும் காட்டாமணக்கு நெய்யும் அனுபானமாகும். தேய்த்துக் கழுவ சிகைக்காய் பயன்படுத்த வேண்டும்.

கபலலித விரணத்தில் தேனும் பிரம்மதண்டி நெய்யும் அனுபானம் ஆகும். தேய்த்துக் கழுவக் கொள்ளிலையைப் பயன் படுத்தலாம்.

4.

வெள்ளிப் பற்பம்
வெள்ளிப் பொடி ஒரு பலத்திற்கு
இரண்டு பங்கு வீதம் நெட்டி இலைச் சாறு ஒவ்வொரு நாளும் விட்டு ஊற வைத்து, 6
நாட்கள் கழித்து எடுக்கவும், பிறகு ஒரு நாள் கோவை இலைச்சாற்றில் ஊற வைத்து
எடுத்து மறுநாள் மேற்படி சாற்றால் அரைத்து வில்லை செய்து உலர்த்திக்
கொள்ளவும். கறுவேலின் தோலை வேம்பின் நெய்யால் 4 நாழிகை அரைத்து மூசை செய்து
நிழலில் உலர்த்தி, மகிழம்பூத் தூளை மூசையில் சிறிது இட்டு வில்லையை வைத்து
மேலே மேற்படித் தூளை நிறைத்துத் தினம் ஒரு சீலை மண் செய்து உலர்த்தி,
அதுபோலவே மற்ற 6 நாள் சீலை செய்து உலர்ந்த பின் 100 எருவில் புடமிட்டு
எடுக்கப் பற்பமாகும்.

அளவு: 1 முதல் 2 குன்றிமணி அளவு.

அனுபானம்: தேன், நெய், சர்க்கரை ஆகிய அனுபானங்களில் வழங்கவும்.

தீரும் நோய்கள்:
மேக வாதங்கள்
மேக விரணங்கள்
மேக ஊறல்கள்
மேகப் புள்ளிகள் முதலான மேக நோய்கள் நீங்கும்.

பத்தியம்: புளி கால் பங்கே சேர்க்கலாம்.

5.நெல்லிமுள்ளிக் குடிநீர்
நெல்லிமுள்ளி
வேப்பம்பட்டை
பேய்ப்புடல்
மேல் தோல் நீக்கப்பட்ட சீந்தில் தண்டு

இவை வகைக்கு 9 1/2 வராகன் எடை எடுத்துச் சிதைத்து, 9 ஆழாக்கு தண்ணீர்
வார்த்து நாலில் ஒரு பாகமாகச் சுண்ட வைத்து இறக்கி வடிகட்டிக் குடித்து
வருக. இவ்விதம் 6 நாட்கள் காலையில் மாத்திரம் கொள்ள மேக வெட்டை, பித்த
வெட்டை நீங்கும்.

6 . மேகாதிக் குழித்தைலம்
முற்றின வேளை வேர்
சங்கன் வேர்ப்பட்டை
சேராங்கொட்டை
பூவரசம்பட்டை
சித்திரமூல வேர்ப்பட்டை
நுணா வேர்ப்பட்டை
வேப்பம் பட்டை
சிவனார் வேம்பு வேர்
சதுரக்கள்ளி
நிலவாகைப் பட்டை
மருதம் பட்டை

இவை சம எடை எடுத்து நிழலில் உலர்த்திக் குழித்தைலமாக இறக்கிக் கொள்ள வேண்டும்.

அளவு: 1 முதல் 1 1/2 வராகன் எடை அளவு எடுத்து அரிசிப் பொரிமாவில் கலந்து உட்கொள்ள வேண்டும். இவ்விதம் 2 வேளை உண்ணலாம்.

தீரும் நோய்: எல்லாவகை மேகப்பிரமிய நோய்களும் தீரும்.

7.குக்கில் நெய்
(அ). அரிசித்திப்பிலி
கண்டத்திப்பிலி
செவ்வியம்
சித்திரமூல வேர்ப்பட்டை
பொன்முசுட்டை
சீந்தில் கொடி
சுண்டை வேர்
வில்வ வேர்
ஆடாதோடை வேர்
இஞ்சி
பேய்ப்புடல்
கண்டங்கத்தரி
வேப்பம் பட்டை
கறுவேலம் பட்டை
ஆயில் பட்டை
புங்கம் பட்டை
சரக்கொன்றைப் பட்டை
கோரைக்கிழங்கு
ஆடுதீண்டாப்பாளை வேர்ப்பட்டை
செங்கடுக்காய்த் தோல்
கொத்துமல்லி விதை
தேவதாரம்
வசம்பு
முட்கா வேளை வேர்

ஆகிய இவற்றை வெயிலில் காயவைத்து இடித்தது வகைக்கு 7 1/2 பலம்.

இவற்றை ஒரு பாண்டத்தில் இட்டு, 16படி நீர் விட்டு எட்டில் ஒன்றாகக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

(ஆ). பசு நெய் 1 படி
பால் 1/2 படி

(இ). சீனாக்காரம்
சிறுநாகப்பூ
மேல் தோல் சீவின சுக்கு
மிளகு
திப்பிலி
தேவதாரம்
கடுக்காய்த் தோல்
தான்றித்தோல்
நெல்லிமுள்ளி
சவுக்காரம்
சத்திச்சாரம்
கோஷ்டம்
வசம்பு
இலவங்கப்பத்திரி
கொடிவேலி வேர்ப்பட்டை
கண்டத்திப்பிலி
கையாந்தகரை
கடுகுரோகணி
சாறணைக் கிழங்கு
பூமி சர்க்கரைக் கிழங்கு
அதிவிடயம்
பொன்முசுட்டை வேர்
வெண் கடுகு
சடாமாஞ்சில்
பெருங்குரும்பை
யானைத் திப்பிலி
பெருங்காயம்
ஓமம்
இந்துப்பு
வளையலுப்பு
வெடியுப்பு
கல்லுப்பு
பெருமரப்பட்டை – இவை வகைக்கு 1 வராகன் எடை.

இவைகளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்துக் கொள்ளவும். சுத்தி
செய்த குக்கி 5 பலம் எடுத்து இடித்துக் கொள்ளவும். பிறகு இரண்டையும்
சேர்த்து அம்மியில் வைத்துப் பாலைச் சிறுகச்சிறுகத் தெளித்து வெண்ணெய் போல்
அரைத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை: (அ) வில் உள்ள குடிநீருடன் (ஆ) வில் உள்ள நெய்யையும்,
பாலையும் கலந்து (இ) யில் சொன்னபடி சித்தப்படுத்தினதைக் கரைத்து
அடுப்பேற்றி 5 நாள் வரையில் மந்தாக்கினியாக எரித்துக் காய்ச்சிக் கடுகு
திரள் பதத்தில் இறக்கி வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து வாய்பந்தனம்
செய்து 1 வாரம் வரை தானிய புடம் வைத்துப் பின் உபயோகிக்கவும்.

அளவு: 1 வராகனெடை, காலை மாலை இரண்டு வேளை உபயோகிக்கலாம்.

அனுபானம்: தேன், சர்க்கரை, வெண்ணெய் முதலியன.

தீரும் நோய்கள்:
21 வகை பிரமியம்
பிளவை
எண்வகைக் குன்மம்
விப்புருதி
கொங்கைக் குத்து
கண்டமாலை
கை கால் முடக்கு
உடலில் கருப்பு முதலியன நீங்கும்.

பத்தியம்: புளி, புகை, கசப்பு, நல்லெண்ணெய், கடுகு, மீன்,
கருவாடு, அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, பூசணிக்காய், பறங்கிக்காய்,
தேங்காய் இவை ஆகா. இச்சாபத்தியம்.vaginal discharge

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button