நடிகர் விஜய் “வாரிசு” படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” படத்தில் நடித்து வருகிறார். “மாஸ்டர்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் – லோகேஷ் கனகராஜ் இணையும் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் நடிக்கும் “தளபதி 68” படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலையை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள தளபதி 68 படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.
இதற்கான அறிவிப்பை படக்குழுவினர் வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sooo happy to collaborate with @actorvijay after a looooong time ???? Super excited… This is ????????????#Thalapathy68@Ags_production @vp_offl @archanakalpathi @Jagadishbliss @aishkalpathi @venkat_manickam @onlynikil @RIAZtheboss pic.twitter.com/7VMTnTXtgE
— Raja yuvan (@thisisysr) May 21, 2023