2000 ரூபாய் நோட்டு செல்லாது என கடந்த 19ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. செப்., 30க்குள், வங்கிகளில் ஒப்படைக்கலாம் அல்லது வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று முதல் மக்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது 2,000 ரூபாய் நோட்டுகளை அருகில் உள்ள வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்கின்றனர்.
இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனால் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு தனது ட்விட்டர் பக்கத்தில் 2000 ரூபாய் நோட்டுகள் குவிந்து கிடக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், நடிகர் வெண்ணிலா கிஷோரின் வீட்டிற்கு சென்றிருந்த போது இந்த புகைப்படத்தை எடுத்தேன்.
அந்த 2000 நோட்டுகளை என்ன செய்யப் போகிறார் என்று பதிவிட்டுள்ளார். நடிகர் வெண்ணிலா கிஷோரின் பதிவுகள் சர்ச்சைக்குள்ளான நிலையில் அவரை கேலி செய்யும் வகையில் இந்த பதிவு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பதிலுக்கு, வெண்ணிலா கிஷோர் அவருக்காக ஒரு நகைச்சுவை எமோஜியைப் பகிர்ந்துள்ளார். நகைச்சுவை நடிகரின் பதிவிற்கு சிலர் நகைச்சுவையாகவும், மற்றவர்கள் அதை சீரியஸாகவும் எடுத்துக்கொள்கிறார்கள்.
Photo was taken when I visited Sri. @vennelakishore garu home. I wonder what he will do with these 2000₹ notes. ???? pic.twitter.com/bLApojXxyA
— Vishnu Manchu (@iVishnuManchu) May 20, 2023