சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகரில் உள்ள கேஆர்எம் நகரில் வசித்து வருபவர் ஜானகி. இவரது மகன் 16 வயது ஜீவா. தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. குறைந்த மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றார். இதனால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். இவர் ஏற்கனவே 10ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தார்.
11ம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாகப் படித்தார். ஆனால் அவரால் மார்க் வாங்க முடியவில்லை. இதனால், கடிதத்தை விட்டு சென்ற ஜீவா, விருபுரத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அந்த கடிதத்தில், தனது தாயும், பாட்டியும் தான் கஷ்டப்பட்டு படிக்க வைத்ததாகவும், 10-ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்றதாகவும், 11-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதாகவும் கூறியுள்ளார்.
இம்முறையும், எனது மதிப்பெண்கள் வீழ்ச்சியடைந்து, கல்வியைப் பெறுவதற்கு நான் தகுதியற்றவனாக இருந்தேன். அதனால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று எழுதினார். கடிதம் மற்றும் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.