Other News

இருவேறு தந்தைகள்! ஒரே கருவில் பிறந்த இரட்டை குழந்தை

1662694934 twins 0

கோயாஸில் உள்ள மினெரியோஸைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் ஒரே நாளில் இருவேறு நபருடன் உடலுறவு கொண்டதை அடுத்து ஒரே நாளில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்திருக்கிறார்.

இரட்டைக் குழந்தைகளின் தந்தை யார் என்பதில் சந்தேகம் இருந்ததால், அவர் தனது சந்தேகத்தை உறுதிப்படுத்திக்கொள்ள ஒரு தந்தைவழி சோதனையை மேற்கொண்டார் என்று குளோபோ செய்தியின் மூலம் தெரிய வந்திருக்கிறது.

அதன்படி, DNA டெஸ்ட் எடுத்து பார்த்ததில் ஒரு குழந்தைக்கு மட்டும் பாசிட்டிவ் என பரிசோதனை முடிவு வந்ததைக் கண்டு அந்த பெண் திகைத்துப் போயிருக்கிறார். இதில் ஆச்சர்யப்படக் கூடிய விஷயம் என்னவென்றால், இருவேறு ஆண்களால் கருவுற்றிருந்தலும் இரண்டு குழந்தைகளின் உருவ ஒற்றுமையில் குறிப்பிடும்படி பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசியுள்ள அப்பெண், எனக்கு நினைவிருக்கிறது. ஒரே நாளில் இருவருடன் வேறு வேறு நேரங்களில் உறவுக் கொண்டேன். ஆகையால் அந்த நபரை அழைத்து டெஸ்ட் எடுக்க முற்பட்டேன். இறுதியில் அது பாசிட்டிவ் என வந்திருக்கிறது.

இது ஆச்சர்யமாக இருக்கிறது. இப்படி நடக்கும் என எனக்கு தெரியாது. இருப்பினும் குழந்தைகள் இருவரும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பேசியுள்ள மருத்துவர் துலியோ ஜார்ஜ் ஃப்ரான்கோ, இந்த நிகழ்வு மிகவும் அரிதானது இருந்தாலும், அது முற்றிலும் சாத்தியமற்றது அல்ல. அறிவியல் ரீதியாக, இது heteroparental superfecundation என்று அழைக்கப்படுகிறது.

ஒரே தாயிடமிருந்து இரண்டு முட்டைகள் வெவ்வேறு ஆண்களால் கருத்தரிக்கப்படும் போது இந்த நிகழ்வு சாத்தியமாகிறது.

குழந்தைகள் தாயின் மரபணுவை பகிர்ந்து கொண்டாலும் அவை வெவ்வேறு நஞ்சுக்கொடிகளினாலேயே வளர்கின்றன.என ஃப்ரான்கோ உள்ளூர் செய்தியான குளோபோவிடம் கூறியிருக்கிறார்.

இந்த வழக்கின் தீவிர அரிதான தன்மையை மருத்துவர் வலியுறுத்தினார், இது ஒரு மில்லியனில் ஒருவர் என்று கூறினார். அறிக்கைகளின்படி, 20 பிற ஹீட்டோரோபரன்டல் சூப்பர்ஃபெகண்டேஷன் மட்டுமே உள்ளன.

இது மில்லியனில் ஒருவருக்கு நிகழும் அரிதான தீவிர தன்மையை கொண்டது எனவும் தெரிவித்துள்ள மருத்துவர், உலகில் இதுவரை heteroparental superfecundation தன்மை கொண்ட 20 வழக்குகள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

குழந்தைகள் பிறந்து தற்போது 16 மாதங்கள் ஆகின்றன. அந்த குழந்தைகளை தந்தையரில் ஒருவர்தான் பராமரித்து வருகிறார் என்றும், இரண்டு குழந்தைகளையும் எந்த பாகுபாடும் இல்லாமல் ஒரு தந்தையே பார்த்துக் கொள்கிறார் என்றும் குழந்தைகளின் தாய் கூறியிருக்கிறார். இதன் மூலம் இந்த இரட்டை குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் ஒரு தந்தையின் பெயரே இடம்பெறும் என்பதை அறிந்துக்கொள்ள முடிகிறது.

 

Related posts

அஜித் குமாரின் குழந்தைப் பருவம் முதல் இளமைப் பருவம் வரையிலான படங்கள்

nathan

நடைபெற்று வரும் சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

nathan

47 வயதில் குழந்தை பெற்ற நடிகை.. பெருமை கொண்ட சீரியல் நடிகை!

nathan

ரவி அப்படி பண்ணதால நேரா ஆபீஸ்கே போனேன் – ரவிக்கு ஆதரவாக பேசிய நபருக்கு சம்யுக்தா

nathan

பெற்றோர்களின் கவனத்திற்கு! எந்த வயதிலிருந்து குழந்தைக்கு முட்டை சாப்பிட கொடுக்கலாம்?…

nathan

திரையரங்கில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பா..?

nathan

மருத்துவமனையில் போப் பிரான்சிடம் ஞானஸ்நானம் பெற்ற குழந்தை

nathan

‘விவாகரத்து படிவத்தில் கையெழுத்து போட்டேன், – எதிர்நீச்சல் பிரபலம்.

nathan

கவினுடன் எல்லை மீறிய கவர்ச்சியில் லொஸ்லியா!புகைப்படம் வைரலாகி வருகிறது

nathan