மருத்துவ குறிப்பு

மூலிகைகளின் அற்புதங்கள்

கீழாநெல்லி :

தண்டு மற்றும் கீரையை இடித்து துணியில் பிழிந்து சாறு எடுத்து சம அளவு விளக்கெண்ணெய் கலந்து காலை மாலை கண்களில் ஒன்றிரண்டு சொட்டுகள் விட்டுவர கண்புரை கரையும். மஞ்சள் காமாலை ரத்தமின்மைக்கு நல்ல மருந்து. ஹெபடைடில் பி எனும் கொடிய வைரசால் பாதிப்புற்றகல்லீரலை மீட்கிறது.

துளசி:

மன அழுத்தத்தைக் குறைக்க துளசி டீ ஏற்றது. வைரஸ் எதிர்த்தும் பாக்டீரியாவை செயலிழக்கவும் செய்யவல்லது. ஆன்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் கொண்டது. தோல் வியாதி, ரத்தத்தை சுத்திகரிக்க, தலைவலி போக்க, சீரணத்தை அதிகரிக்க, அஜீரணத்தை போக்க வல்லது. சளியுடன் வரும் இன்புளுயன்சா காய்ச்சலுக்கு சிறந்த மருந்து நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. ஆஸ்துமா நோயாளிகளின் நண்பன். 20 துளசி இலைகளை 100மி தண்ணீரில் சேர்த்து 20 மில்லியாக சுண்ட வைத்து இளஞ்சூட்டில் காலை மாலை வாய் கொப்பளிக்க வாய் நாற்றம் பல் கூசுதல் தொண்டை புண் தொண்டைச்சளி குணமடையும்.

கரிசலாங்கண்ணி:

கல்லீரலில் ஏற்படும் புண், வீக்கம் மற்றும் ரத்தகசிவை குணப்படுத்தும். இதில் உள்ள இரும்பு சத்து ரத்தத்தில் சிவப்பணுக்களை பெருக்கி ரத்த சோகையை நீக்குகிறது. தலைமுடி, பல், கண், தோலுக்கு ஊட்டத்தை தரவல்லது. ஜீரணத்தை அளிக்க வல்லது. ஹெபடைடில் ஏ.பி மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் இருமலை மட்டுப்படுத்தும் அடிக்கடி சளி பிடிக்கும் தன்மை உள்ளோர் பச்சையாகவோ அல்லது வற்றலாகவோ வாரமிருமுறைஉண்டு வர சளி பிடிக்காது. தொண்டை வலி இதய பலவீனத்தைப் போக்கும். இலைகள் கைப்பிடியளவு சிறிது உப்பு சேர்த்து மண் பானையிலிட்டு வதக்கி நாய் கடித்த இடத்தில் ஒத்தடம் கொடுத்து அதே இலையை வைத்து கட்டினால் நஞ்சு முறிந்து விடும்.

பிரண்டை:

பிரண்டை சாறு கருப்பைக் கட்டிக்கு மருந்து. பைலோரி என்னும் கிருமி உண்டாக்கும் வயிற்றுபுண்னை ஆற்ற வல்லது. பசியை தூண்டும்.

அதிமதுரம்:

நாவறட்சி தொண்டைக்கட்டு வறட்டு இருமலுக்கு “டாக்டர்” குடல் புண்னை ஆற்றும். இனிப்பு, சர்க்கரைக்கு பதிலாக அதிமதுரத்தை பயன்படுத்தலாம்.

அருகம்புல்:

ரத்த கொலஸ்டிராலைக் குறைக்க, உடல் எடை குறைய உதவும் நச்சுக்களால் உடலில் ஏற்படும் திடீர் அரிப்பு நோய் ஒவ்வாமை நோய்க்கு அருகம்புல் சாறு 100மி தினமும் 2 வேளை சாப்பாட்டுக்கு முன் சாப்பிட 15 நாளில் பலனுண்டு.

1458131411 6284

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button