தமிழ் சினிமாவில் முன்னணி கதாபாத்திரத்தில் இருப்பவர் சிவகார்த்திகேயன். நடிகர் சிவகார்த்திகேயன் முதலில் விஜய் டிவியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர்
சமீபத்தில், அவரது ” டாக்டர்” மற்றும் “டான்” திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை மேல் வசூலித்துள்ளன,
முதலில் ஜோடி சீசன் நிகழ்ச்சியை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கும் போது, இவரால் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் ஏராளம், ஆனால் சிவகார்த்திகேயனின் திறமையை அறிந்த விஜய் டிவி அவருக்காக ஒரு நிகழ்ச்சியை உருவாக்க முடிவு செய்து, இது எது என்ற நிகழ்ச்சியை தொடங்கினார். பெரிய வெற்றி பெற்றது.
இன்றைய திரையுலகில் சிவகார்த்திகேயன் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறார். இவர் நடித்த ‘அயலான்’ படம் பல்வேறு காரணங்களால் ரத்து செய்யப்பட்ட நிலையில், தீபாவளிக்கு வெளியாகும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்ததாக உலகநாயகன் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படத்தில் நடிக்கிறார்.இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாவும்,ஜிவி இசையமைப்பாளராகவும் பணியாற்ற உள்ளார்.இப்படத்திற்காக உடல் எடையை முற்றிலும் மாற்றியுள்ளார்,இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது