பிரபல பாலிவுட் நடிகர்களில் ஒருவர் அமீர் கான். அவரது கடைசி படம் லால் சிங் தத்தா.
இந்நிலையில் அமீர்கானின் திருமணம் குறித்து சில செய்திகள் வெளியாகின. எனவே, அவர் தனது மகளின் வயதுடைய பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் வேறு யாருமல்ல பாலிவுட் நடிகை பாத்திமா சனா சாய்க் தான். டங்கல் படத்தில் அமீர்கானின் மகளாக நடித்துள்ளார்.
இருவரும் “டங்கல்” படத்திலிருந்து காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.
நடிகர் அமீர் கான் 1986 இல் ரீனா தத்தாவை திருமணம் செய்து 2002 இல் விவாகரத்து செய்தார்.
பின்னர் 2005 இல் கிரண் ராவை திருமணம் செய்து 2021 இல் விவாகரத்து செய்தார்.
நடிகர் அமீர்கானுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இந்த திருமண தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.