Other News

ஆஷிஷ் வித்யார்த்தியின் இரண்டாம் திருமணம்:முதல் மனைவியின் பதிவு.!

k0qSycI500

தமிழ் சினிமாவின் பல படங்களில் வில்லனாக நடித்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி. 60 வயது முதியவரின் மறுமணம் குறித்த செய்தி நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆஷிஷ் வித்யார்த்தியின் முன்னாள் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘கில்லி’ படத்தில் விஜய்யின் அப்பாவாக நடித்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி. 11 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் ரஜினி பாபா, விஜய்யுடன் கில்லி, தனுஷுடன் மாப்பிள்ளை மற்றும் உத்தமபுத்திரன் ஆகிய படங்களில் இணைந்து நடித்தார். பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர்.

 

ஆஷிஷ் வித்யார்த்தி முதலில் ராஜோஷி பருவாவை மணந்தார். அவர் ஒரு நடிகர், பாடகர் மற்றும் நாடக ஆசிரியர். இவர் பழம்பெரும் நடிகை சகுந்தலா பாலுவின் மகளும் ஆவார். இந்நிலையில், ஆஷிஷ் வித்யார்த்தி, கவுகாத்தியைச் சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

ஆஷிஷ் வித்யார்த்தி தனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். நேற்று இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. திருமணத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

 

இந்நிலையில், ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவி ராஜோஷி பருவாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘ஒரு சரியான நபர் நீங்க என்ன செய்கிறீர்கள் என்ற கேள்வியை கேட்க மாட்டார். அதே போல் உங்கள் மனம் புண்படும்படியும் நடந்து கொள்ள மாட்டார். அதை நினைவின் வைத்துக்கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.

மேலும், அவரது மற்றொரு இடுகையில், அதிகப்படியான எண்ணங்கள் மற்றும் சந்தேகங்களை உங்கள் மனதில் நீக்கவும். அமைதி உங்கள் வாழ்க்கையை ஒளிரச் செய்யட்டும். நீங்கள் நீண்ட காலமாக வலுவாக இருந்தீர்கள். உங்கள் ஆசீர்வாதங்களைப் பெற இதுவே சரியான நேரம். அதற்கு நீங்கள் தகுதியானவர் என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Related posts

மணி பிளான்ட்டை எந்த திசையை நோக்கி வளர்க்க வேண்டும்..?

nathan

அழகு சிகிச்சைகளுக்கு, கூடுதல் ஆலிவ் எண்ணெய் போன்ற பயன்படுத்துவது சிறந்தது.

nathan

பிளேபாய் இதழுக்கு போஸ் கொடுத்த பெண் மந்திரி…! 3 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது

nathan

சல்மான்கானுக்கு ராசியில்லாத காதல் – 8 நடிகைகளுடன் உறவு முறிவு

nathan

வெயில் காலம் தொடங்கியாச்சு! இந்த உணவுகளை சாப்பிடாதீங்க

nathan

நான்கே நாட்களில் உலக சாதனை புரிந்த தளபதி விஜய்.!

nathan

2025ஆம் ஆண்டு வரை கோடியில் புரளும் 3 ராசியினர்கள்

nathan

எப்போது திருமணம் என வாக்குவாதம்.. ஆத்திரத்தில் விஷம்குடித்த காதலன் பலி

nathan

சந்திரமுகி படத்துல நடிச்ச பொம்மியா இது?…..

nathan