அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

சருமத்துக்கு உணவு ஃபேஷியல்

சருமத்துக்கு-உணவு-ஃபேஷியல்வாசனையும், சுவையும் உள்ள உணவுப் பொருள்கள், வாய்க்கு மட்டும் ருசியா இருக்கிறதில்லை. சருமத்துக்கும், கூந்தலுக்கும் கூட ஆரோக்யத்தையும், அழகையும் கொடுக்கிற குணம் கொண்டவையா இருக்கு. பாலாடையை முகத்துல தடவறது, கடலை மாவு பூசறதுனு அந்தக் காலத்துலேர்ந்தே சமையலறை பொருட்கள் பலதும் அழகு சிகிச்சைகள்ல பயன்படுத்தப் பட்டிருக்கு.

*அதுவே கொஞ்சம் டெவலப் ஆகி, இப்ப பெரிய, பெரிய நிறுவனங்களோட அழகுத் தயாரிப்புகள்ல பாலும், தேனும், சாக்லெட்டும், காபியும் பிரதான சேர்க்கைப் பொருளா பயன்படுத்தப் படற அளவுக்கு மாறியிருக்கு’’ என்கிறவர் உதாரணங்களுடன் தொடர்கிறார்.

*பாலும், பால் பொருட்களும் சருமத்துக்கும், கூந்தலுக்கும் ரொம்பவே நல்லது. வறண்ட, முதிர்ந்த சருமத்துக்கு வெண்ணெய் சிகிச்சை பெஸ்ட். அதே மாதிரி வறண்ட உதடுகளுக்கு வெண்ணெயும், தேனும் கலந்து மசாஜ் செய்தா, பட்டு போல மாறும்.* பால் திரிஞ்சா, அதை வடிகட்டி, அந்தத் தண்ணீரை வீணாக்காம எடுத்து, அதுல தலைமுடியை அலசினா, முடி பளபளப்பாகும்.
அந்தத் தண்ணீர்ல உள்ள புரோட்டீன், கூந்தலுக்கு ரொம்ப நல்லது.

*பழங்கள் சாப்பிடறது உள்ளுக்கு எவ்வளவு நல்லதோ, அதே மாதிரி அதை வெளிப்பூச்சுக்கு உபயோகிக்கிறதும் அற்புதமானது. அந்த வகைல பார்த்தா எண்ணெய் பசையான சருமத்துக்கு ஸ்ட்ராபெர்ரி அல்லது ஆப்பிள், வறண்ட சருமத்துக்கு அவகேடோ அல்லது வாழைப்பழம், எண்ணெய் பசை டூ நார்மல் சருமத்துக்கு ஆரஞ்ச மாதிரியான சிட்ரஸ் வகை பழங்கள், பொலிவே இல்லாத சருமத்துக்கு பப்பாளினு அவங்கவங்க சருமத்துக்கேத்தபடி உபயோகிக்கலாம்.

பழத்தோட சதைப் பற்றை வச்சு, லேசா மசாஜ் கொடுத்து, அந்தப் பழக் கூழ்லயே முகத்துக்கு பேக் மாதிரி போட்டு, கொஞ்ச நேரம் ஊறிக் கழுவிடலாம்.இதுக்கெல்லாம் நேரமில்லாதவங்க பார்லர்கள்ல செய்யப்படற ஃப்ரூட்ஃபேஷியல் செய்துக்கலாம்.

*பழங்களை மாதிரியேதான் காய்கறிகளும். வெள்ளரி, கேரட், புதினா, தக்காளினு காய்கறிகளைத் துருவி, முகத்துக்கு மசாஜ் கொடுத்து, பேக் போட்டுக் கழுவினா, முகம் பளிச்னு மாறும்.

சாக்லெட்…

*இது பிடிக்காதவங்களே இருக்க மாட்டாங்க.சாக்லெட் வச்சு செய்யற ஃபேஷியலும் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும். குறிப்பா வறண்ட சருமம் உள்ளவங்களுக்கு, கோகோ பட்டர் சேர்த்த சாக்லெட் ஃபேஷியல் இன்ஸ்டன்ட் அழகைத் தரும். மனசையும் உற்சாகமாக்கும்.

அடுத்தது காபி…

*குடிச்ச உடனே உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது காபி. காபியை பயன்படுத்தி செய்யப் படற ஒருவித ஸ்பெஷல் சிகிச்சை, உடல் பருமனைக் குறைக்க உதவுது. கிரீம், ஸ்க்ரப்னு எல்லாத்துலயும் காபி கலந்திருக்கும். அதோட வாசனையும், அனுபவமும் ரொம்ப சுகமா இருக்கும்.

*தேங்காய் மிகச் சிறந்த அழகுப் பொருள்னு எல்லாருக்கும் தெரியும். 2 டீஸ்பூன் கசகசாவை ஊற வச்சு, அரைக்கவும். அதுல 8 டேபிள் ஸ்பூன் தேங்காய் பாலும், 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயும் கலந்து, தலைல தடவி, ஷவர் கேப் போட்டு, அரை மணி நேரம் ஊறி, மிதமான ஷாம்பு போட்டுக் குளிச்சா, மண்டைப் பகுதி சுத்தமாகும். உடம்போட சூடு குறையும். கூந்தலுக்கும் ஆரோக்கியம். 20 லிட்டர் வெதுவெதுப்பான தண்ணீர்ல ஒரு சின்ன கப் பால், 2 டீஸ்பூன் தேன், கொஞ்சம் ஆரஞ்சு பழத் தோல், ரோஜா இதழ் சேர்த்துக் குளிச்சா, உடம்பு பளபளப்பாகும்.

*பொறுக்கும் சூடுள்ள வெந்நீர்ல கைப்பிடி அளவு புதினா இலை, கொஞ்சம் உப்பு சேர்த்து, கால்களை ஊற வச்சா, கால்களோட களைப்பு நீங்கி, புத்துணர்வு கிடைக்கும்.

*கொஞ்சம் பாலாடையோட, பேரீச்சம் பழ சிரப், வெனிலா எசென்ஸ் சேர்த்து, கைகள்ல தடவி, ஒரு ஃபாயிலால மூடி, கொஞ்ச நேரம் கழிச்சு எடுத்தா, கைகள்ல உள்ள சுருக்கங்கள் நீங்கி, அழகாகும்.

*கொஞ்சம் அதிமதுரத்தையும், காயாத பச்சை தேயிலையையும் தண்ணீர்ல போட்டுக் கொதிக்க வச்சு, டிகாக்ஷன் எடுத்து, முகத்துல தடவி, 10 நிமிஷம் கழிச்சுக் குளிர்ந்த தண்ணீர்ல கழுவினா, கருமை நீங்கி, முகம் பிரகாசமாகும்.பட்டாணி மாவுல கொஞ்சம் தயிரும், சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து, முகம், கழுத்து உள்பட உடம்பு முழுக்க தடவி, 15 நிமிடங்கள் கழிச்சுத் தேய்ச்சு எடுத்துக் குளிச்சா, குளிர்காலத்துல உண்டாகிற சருமப் பிரச்னைகள் நீங்கி, சருமம் அழகாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button