எடை குறைய

உடல் பருமனை குறைக்கும் வெற்றிலை

தாம்பூலம், மெல்லிலை என்று அழைக்க கூடிய வெற்றிலையில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது வாயுவை வெளித்தள்ள கூடியது. நோய்கள் வராமல் தடுக்கிறது. நுண்கிருமிகளை போக்க கூடியது.வெற்றிலையை பயன்படுத்தி உடல் பருமனை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். 2 வெற்றிலையில் 5 மிளகு வைத்து வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு சாறை மட்டும் விழுங்கிவிட வேண்டும். இதேபோல் இரண்டு மாதங்கள் வரை செய்துவர உடல் எடை குறையும்.

வெற்றிலையை கொண்டு நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் வெற்றிலை சாறுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டுவர நரம்புகளுக்கு பலம் கிடைக்கும். மூளை பலம் பெறுவதுடன் ஞாபக சக்தி அதிகரிக்கும். வெற்றிலையை பயன்படுத்தி மூச்சுதிணறல், நெஞ்சக சளியை போக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். பாத்திரத்தில் சிறிது கடுகு எண்ணெய்யை சூடுபடுத்தவும். இதில் வெற்றிலைகளை வைத்து லேசாக வதக்கவும். இந்த வெற்றிலைகளை இளஞ்சூட்டில் மார்பில் வைக்கும்போது நெஞ்சக சளி கரைந்து வெளியேறும்.

வெற்றிலையை பயன்படுத்தி யானைக்கால் ஜுரம், விரைவீக்கத்துக்கான மருந்து தயாரிக்கலாம்.5 வெற்றிலையை துண்டுகளாக்கி, அதனுடன் கால் ஸ்பூனுக்கும் சற்று குறைவாக உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்து வர யானைக்கால் நோய், விரைவீக்கம் சரியாகும். விட்டுவிட்டு காய்ச்சல் ஏற்பட்டு கால்கள் சிவந்து சிறிது சிறிதாக பருத்து கொண்டே வருவது யானைக்கால் நோய். நுண்கிருமிகளால் இது ஏற்படும்.

இந்த வீக்கத்தை வெற்றிலை தேனீர் குறைக்கும். விரைவாதம் ஏற்படுவதால் நெறிக்கட்டி காய்ச்சல் வரும். இதை தடுக்க இந்த தேனீர் பயன்படுகிறது. வெற்றிலையை பயன்படுத்தி கீழ்வாதம், விரைவாதத்துக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய்யுடன், நீர்விடாமல் அரைத்த வெற்றிலை பசையை சேர்க்கவும். இதை பத்தாக போட்டுவர கீழ்வாதம், விரைவாதம் சரியாகும். வாய் சிவப்பதற்காக பயன்படுத்த கூடிய வெற்றிலையில் பல்வேறு நன்மைகள் உள்ளன.

வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது. நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவர ஞாபக சக்தியை அதிகரிக்கும். வெற்றிலை சாறை ஒரு சொட்டு காதில் விட்டால், காதில் ஏற்படும் வலி, சீல் பிடித்தல் போன்றவை குணமாகிறது.ht1291

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button