ஃபேஷன்

கலர் கலராய் கவரும் காலணி

ஆடை, ஆபரண மோகம் மட்டுமல்ல, விதவிதமான செருப்புகள், ஷூக்கள் மீதான ஆசையும் பெண்களுக்கு அதிகரித்துவிட்டது. எந்த பொருளையும் ஒன்றுக்கு பத்து முறைக்கு அலசி ஆராய்ந்து வாங்கும் குணம் பெண்களுக்கு இயற்கையாகவே இருப்பதால், அவர்களின் எண்ணங்களுக்கும், கனவுகளின் வண்ணங்களுக்கும் ஏற்ப விதவிதமான டிசைன்களில் செருப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. பொதுவாக எல்லா செருப்புகளுமே பார்ப்பதற்கு அழகாக இருக்கும். செருப்புகளின் அழகை பார்க்காமல், தங்கள் உடல் அமைப்புக்கு ஏற்றவாறும், அணியும் உடைக்கு ஏற்றவாறும், ஆரோக்கியத்துக்குரியதாகவும் அதை தேர்வு செய்வது அவசியம். எந்த பொருளாக இருந்தாலும் அதற்கு ஆரம்பம் ஒன்று இருக்கும். செருப்புக்கு என்றும் வரலாறு உண்டு. சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நாகரீக வளர்ச்சியை எட்டாத மனிதர்கள் செருப்பு அணிந்து காடுகளில் அலைந்து திரிந்துள்ளனர்.

அமெரிக்காவில் போர்ட்ராக்கேவ் என்ற பகுதியில் வாழ்ந்த ஆதிவாசிகள் தான் உலகில் முதன் முதலில் செருப்பை அணிந்து கொண்ட பெருமைக்கு உரியவர்கள். இவர்கள் தாவரம் மற்றும் மரங்களின் இலை-தழைகளை மொத்தமாக சேர்த்து அதை செருப்பு போன்று அணிந்துள்ளனர். அதன்பிறகுதான் பூமியின் பிற பகுதிகளில் வாழ்ந்த மனிதர்கள் செருப்பின் அவசியத்தை உணர்ந்து, அதை உருவாக்கி பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். காலபோக்கில் இலை-தழைகளுக்கு பதிலாக மரம், விலங்குகளின் எலும்புகள் போன்றவற்றை பயன்படுத்தியும் செருப்புகள் உருவாக்கிக்கொண்டார்கள். சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் நாகரீக செருப்புகள் உருவாக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்தன.

ஏதோ ஒரு செருப்பு வாங்கினோமா… அதை பல வருடங்கள் போட்டு கிழித்து பின்னர் புது செருப்பு வாங்க சென்ற கடையில், கிழிந்த செருப்பை காட்டி இதே செருப்பு நீங்கள் வாங்கிய அதே விலையிலேயே இப்போதும் வேண்டும் என்று பேரம் பேசி வாங்கி நடந்து பார்த்து திருப்தி அடைந்த காலம் எல்லாம் மலை ஏறிப்போய்விட்டது. தங்களது ஆடைகளுக்கும், சென்று வரும் இடங்களுக்கும் ஏற்ற வகை வகையான செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து கொள்ளும் நாகரீகக் காலம் இது. எனவே செருப்பு அணியும் போது, அதற்கு பொருத்தமான ஆடையை தேர்வு செய்வது முக்கியம். கறுப்பு அல்லது டார்க் கலர் ஆடையை அணிந்து கொண்டு, பிரவுன், சந்தன நிற செருப்புகளை அணிந்தால் பொருத்தமாக இருக்காது. அதேநேரம், கறுப்பு அல்லது டார்க் நிற செருப்பை அணிந்துகொண்டால் பொருத்தமாக இருக்கும்.

பெண்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இன்றைய புட்வேர் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன. இதுவரை, ஆடைகளில் மட்டுமே காணப்பட்ட எம்ராய்டரி வேலைகள் இப்போது நவீன செருப்புகளிலும் இடம்பெறுகின்றன. இன்றைய நாகரீக மங்கையர் அதிக விரும்பி தேர்வு செய்வது, எம்ராய்டரி வேலைகள் காணப்படும் இந்த செருப்புகள் தான். எம்ராய்டரி வேலைகள் காணப்படும் செருப்புகள் உருவாக்குவதற்கு என்றே தனி டிசைனர்கள் உள்ளனர். இவர்களின் கை வண்ணத்தில் பல புதிய மாடல்களில், புதிய டிசைன்களில் எம்ராய்டரி வொர்க் செருப்புகள், ஹீல்ஸ்கள் தயாராகி விற்பனைக்கு வருகின்றன.

இன்றைய பெண்கள் பெரும்பாலும் பிளாட் மற்றும் பாயின்ட்டட் வகை ( ஹீல்ஸ் போன்ற மெல்லிய வடிவம்) காலணிகளையே அதிகம் தேர்வு செய்கிறார்கள். இவைதவிர, ஸ்டெலட் டோஸ், மழைக் காலங்களில் கால்களுக்கு பாதுகாப்பு தரும் லாங் பூட்ஸ், லேக் அப்ஷூ மற்றும் பூட்ஸ், ரெடைல் லெதர், ஓபன் டை ஷூ என்று பல வகைகளில் தயாராகும் காலணிகள் இன்றைய மாடர்ன் மங்கையரின் அழகு கால்களை அலங்கரிக்கின்றன. இந்த செருப்பு வகைகளுடன் மேரி ஜேன் என்ற செருப்பும் இன்றைய புட்வேர் மார்க்கெட்டில் முன்னணியில் இருந்து வருகிறது. ப்யூர் லெதரால் உருவாக்கப்படும் இந்த செருப்பு, அதை அணிந்து கொள்ளும் பெண்களின் கால்களை கடிக்காது. மாறாக மென்மையை கொடுக்கிறது.
ஹீல்ஸ் வகை செருப்புகள் பெண்களுக்கு பல வழிகளிலும் உதவி புரிகின்றன. குட்டையான பெண்கள் அதை அணிந்துகொண்டால் உயரமான பெண்ணாகி விடுகிறார்கள்.

இந்த ஹீல்ஸ் வகை செருப்பை அணிந்து கொண்டால் மூட்டு வலி ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். பொருத்தமான ஹீல்சை தேர்வு செய்து அணிந்தால் இந்த பயம் தேவையில்லை. புதிதாக ஹீல்சை அணியும்போது வலி இருக்கலாம். நாளடையில் அது சரியாகிவிடும். ஹீல்சில் பிளாட் மற்றும் பாயின்ட்டட் மாடல்கள் இன்று நிறைய கிடைக்கின்றன. 40 முதல் 50 கிலோ உடல் எடை கொண்ட பெண்கள் மாத்திரமே பாயின்ட்டட் மாடல் ஹீல்சை அணிந்துகொள்ளலாம். மற்றவர்கள் அணிந்தால் சிரமமாக இருக்கும். நடக்கும்போது கால் இடறி விழுந்துவிடக்கூடும். அதேநேரம் பிளாட் மாடல் ஹீல்ஸ்களை எந்த வயதினரும், எவ்வளவு உடல் எடை கொண்டவர்களும் அணிந்து கொள்ளலாம்.ld1251

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button