மருத்துவ குறிப்பு

கால்சியம் உடலுக்கு ரொம்ப அவசியம்!

கால்சியம் என்றால் சுண்ணாம்பு. லத்தீனில் கால்சிஸ் என்ற வார்த்தைக்கு சுண்ணாம்பு என்பதுதான் பொருள். பூமியின் மேலோட்டில் கிடைக்கும் சாம்பல் நிற தனிமம் தான் கால்சியம். பூமியில் கிடைக்கும் தனிமங்களில், 5வது இடத்தைப் பெற்றுள்ளது.

நம் உடலில் அதிகமாக இருக்கும் தனிமங்களில் கால்சியமும் ஒன்று. 70 கிலோ மனிதனின் எடையில், 2% கால்சியம் உள்ளது. அதாவது 1,400 கிராம் கால்சியம் ஆண்களுக்கும், பெண்களுக்கு, 1 கிலோவும் இருக்கிறது. நம் உடலின் தசைகள் சுருங்கி விரியவும், இதயத்தின் இனிமையான தாள லய துடிப்பிற்கும் கால்சியத்தின் உதவி தேவை.

அது மட்டுமல்ல, காலில் முள்குத்தினாலோ, நெருப்பு சுட்டுவிட்டாலோ, வலி உணர அந்த செய்தியை நரம்புகள் மூலம், மூளைக்கு கொண்டு செல்லவும், ஏதாவது வெட்டுக்காயம் ஏற்பட்டால் அதன் வழியே ரத்தம் வெளியேறுவதை தடுத்து, ரத்தம் உறைய வைக்கவும் கால்சியம் கட்டாயம் தேவை.
அது மட்டுமல்லாமல் நாம் உண்ணும் உணவை ரசிக்க, ருசிக்க மற்றும் கரைக்க தேவையான எச்சிலை சுரக்கவும் உதவி செய்கிறது. பொதுவாக, 30 வயதுக்கு மேல் ஆகி விட்டால், எலும்பிலுள்ள கால்சியம் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். ஏனெனில் நம் எலும்பு வளர்ச்சி அத்துடன் நின்றுவிடும்.

ஆகையால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க, தொடர்ந்து உடலுக்கு வேண்டிய கால்சியத்தை தந்து கொண்டே இருக்க வேண்டும். பொதுவாக நாம் உண்ணும் உணவில் கால்சியம் சத்து குறைவாகவே உள்ளது. இது தொடர்ந்து நிகழ்ந்தால் எலும்பிலுள்ள கால்சியம் குறைவதால், அரிமானம் ஏற்பட்டு எலும்பின் உறுதி குறையும்.

இந்நிலை குழந்தை பருவத்தில் ஏற்பட்டால், எலும்பு வலுவின்றி வளைந்து ரிக்கெட்ஸ் என்ற நோய் வரும். தினமும் சுமார், 400 500 மில்லி கிராம் வரை கால்சியம் வியர்வை, சிறுநீர் மற்றும் மலத்தின் வழியே வெளியேறுவதால், உடலின் கால்சியம் அளவு தினந்தோறும் குறைகிறது. கால்சியம் பெண்களுக்கு, மாதவிடாய்க்கு முந்தைய நாட்களின் மனநிலையை ஒழுங்குபடுத்துகிறது.

இல்லையெனில், பெண்களுக்கு தசைப்பிடிப்பு, எரிச்சல், மன அழுத்தம் போன்றவை ஏற்படும். மாதவிடாய் சமயத்தில் தினம், 1 கிராம் கால்சியம் எடுத்துக் கொண்டால் பெண்களுக்கு, மாதவிடாயின் தொந்தரவு இருக்காது. அப்போது ஏற்படும் தலைவலி, வயிறு உப்புசம், கை, கால் வலி போன்றவற்றை கால்சியம் நீக்குகிறது.

அப்போது உண்டாகும் வயிற்று வலியையும், கால்சியம் துரத்தி விடும். மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை, கால்சியம் நீக்கி விடுகிறது என பல்வேறு ஆய்வுகள் விளக்குகின்றன.
E 1441016431

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button