மருத்துவ குறிப்பு

குறட்டை விட்டால் இதயத்துக்குப் பிரச்னையா?

எனது கணவரின் குறட்டை ஒலி நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. மருத்துவரை பார்த்து சரி செய்து கொள்ளுங்கள் என்றால், குறட்டை ஒரு பிரச்னையே இல்லை என்கிறார். குறட்டையை குறைக்க என்ன செய்ய வேண்டும் டாக்டர்?

ஐயம் தீர்க்கிறார் காது மூக்கு தொண்டை மற்றும் தூக்க நல மருத்துவர் எம்.கே.ராஜசேகர்…

உங்கள் கணவர் தூங்கும் முறை சரியாக இருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். குறட்டை ஒலியின் தீவிரத்தை வைத்துதான், அவருக்கு பிரச்னை எந்த அளவு உள்ளது என்பதைக் கண்டறிய முடியும். அவரது குறட்டை ஒலியானது மற்றவர்களை தொந்தரவு செய்கிறதா? குறட்டையினால் மூச்சுத் திணறி தூக்கத்தில் இருந்து எழுந்து உட்கார்கிறார் என்றால், அவரது தூக்கத்தை மருத்துவரீதியாக பரிசோதனை செய்வது அவசியம்.

எதனால் அவருக்கு குறட்டை வருகிறது என்பதை ஆராய்வதும் அவசியம். மேல் உதடு வீங்கியிருந்தால், உள் நாக்கு தடித்திருந்தால் அல்லது மூக்கு தண்டு வளைந்து இருந்தால் கூட குறட்டை ஒலி வரும். குழந்தைகளுக்கு அடினாய்டு சுரப்பிகள் தடித்திருந்தால் கூட குறட்டை ஒலி வரும். ஸ்லீப் ஸ்டடி’ எனப்படும் அவரது தூக்கம் பற்றிய ஆய்வை பிரத்யேகமான சில உபகரணங்களை சம்பந்தப்பட்டவரின் உடலில் மாட்டி, அதன் பின் தூங்கச் செய்வதன் மூலம் கண்டறிந்து விடலாம். டயனமிக் எம்.ஆர்.ஐ. மூலமாகவும் குறட்டை ஒலிக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியும். சிகிச்சை அளித்து எளிதாக சரி செய்துவிடலாம்.

குறட்டை வருகிறது என்றவுடன் சிலர் எங்கே நமக்கு மூச்சடைப்பு அல்லது இதய தாக்கு நோய் ஏற்படுமோ என்றெல்லாம் பயந்து மருத்துவரிடம் வருகிறார்கள். Obstructive Sleep Apnea என்னும் பிரச்னை இருந்தால் குறட்டையுடன் சேர்ந்து மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தும். மற்றபடி சாதாரண குறட்டைக்கு பயப்பட தேவையில்லை. மது அருந்துபவர்கள் தூங்கும்போது உள்நாக்கு தொண்டையை அடைத்துக் கொண்டு குறட்டையை ஏற்படுத்தும். மதுப்பழக்கம் இருந்தால் விட்டுவிடுவது நல்லது.”
ht4387

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button