34.9 C
Chennai
Sunday, May 11, 2025
ஆரோக்கிய உணவுஆரோக்கியம்

உடல் பருமனைக் குறைக்கும் சோளம்!

fresh corn vegetable with green leavesதானிய வகைகளில் ஒன்றானது சோளம். சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்ல சிறந்த இயற்கை உணவாகும்.

இது உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும், வாய் நாற்றத்தைப் போக்கும். அதிகளவு நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்பு சத்துக்களை கொண்டுள்ள சோளம் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தவிர்த்து, செரிமானத்திற்கும் உதவி புரிகிறது.

Corn-1சம அளவு கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகளை கொண்டுள்ள மக்காச்சோளத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்கும்.

இயற்கை உணவான சோளம் நீரிழிவு ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது. கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் நிறைந்து காணப்படுவதால் மன அழுத்தத்தை தடுக்கிறது.

An ear of corn isolated on a white backgroundமஞ்சள் நிறம் கொண்ட சோளம், குரல்வளைவில் ஏற்படக்கூடிய நோய் அபாயத்தை தவிர்க்கிறது,  மேலும் பார்வைக்கோளாறு ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளில் சோளமும் ஒன்று. கர்ப்பிணி பெண்கள் தங்களின் வழக்கமான உணவாக சோளத்தை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.

yellow-corn-01சோளம் குறைந்த அளவு கொழுப்பினை கொண்டுள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக இருப்பதோடு, இதயம் சம்பந்தபட்ட நோய்களையும் எதிர்க்க உதவிபுரிகிறது.

சோளமாவாவை அழகு, சமையலுக்கு பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தோல் தடித்தல், எரிச்சல் ஏற்படக்கூடிய இடத்தில் பயன்படுத்தினால் தோல் சம்பந்தபட்ட பிரச்சனைகளை சரிசெய்யலாம்.

Corn,,சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு. கண் குறைபாடுகளை சீர் செய்யும் ‘பீட்டா கரோட்டின்’, இதில் அதிகமாக உள்ளது.

Related posts

தெரிஞ்சிக்கங்க…இட்லி போன்ற அவித்த உணவுகளை சாப்பிடுவதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!

nathan

பலாப்பழ விதைகளை எடுத்து கொள்வதால் உடலில் ஏற்படும் ஆச்சரிய நன்மைகள்..!!தெரிஞ்சிக்கங்க…

nathan

தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்

nathan

டைப் 2 நீரிழிவு நோயாளிகள் தினமும் ஏலக்காய் டீ குடிக்கலாமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

“எக்ஸ்ட்ரா சதையை எளிதில் குறைக்கலாம்!”உடற்பயிற்சி!

nathan

உடல் சூட்டை தணிக்கும் தாமரைப்பூ

nathan

உங்களுக்கு தெரியுமா இளம் பெண்களுக்கு ஊட்டம் அளிக்க கூடிய உணவுகள் இவைதானாம்

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கான சர்க்கரை குறைவாக உள்ள 12 ருசியான உணவுகள்!!! நீங்களும் முயற்சி செய்யுங்கள் ..

nathan

சுவையான சுரைக்காய் குருமா

nathan