கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

எண்ணெய்ப் பசையான கூந்தல்

ld292தலையில் காணப்படும் எண்ணெய் சுரப்பிகள் அதிகளவில் சுரப்பதால், கூந்தல் எண் ணெய்ப் பசையுடன் காணப்படுகிறது. கூந்தல் எண்ணெய் தன்மையுடன் இருப்பதால், தூசு மற்றும் அழுக்கு போன்றவை எளிதில் சேர்ந்து விடும்.

* எண்ணெய்ப் பசையான கூந்தல் உடையவர்கள், அடிக்கடி தலைக்குக் குளிப்பதோடு, தலையில் தூசு மற்றும் அழுக்கு போன்றவை சேராமல் பராமரிக்க வேண்டும்.

* எண்ணெய்த் தன்மை கூந்தலுடையவர்கள் மருதாணி அல்லது எ<லுமிச்சை போன்ற பொருட்கள் கலந்த ஷாம்புக்களாக வாங்கி பயன்படுத்துவது நல்லது.

* வேப்பிலைச் சாறுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்க, தலையில் அதிகப்படியாக காணப்படும் எண்ணெய் பிசுபிசுப்பு நீங்கும்.

*கேரட்டை வேகவைத்து மசித்து, தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து குளித்தால், எண்ணெய் பசை கட்டுப்படும். மேலும் எண்ணெய்ப் பசை கூந்தலுடையவர்கள் உணவில் எண் ணெய் பதார்த்தங்களை குறைத்துக் கொள்வது நல்லது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button