கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சை

எளிமை… வலிமை… கூந்தலுக்கான வீட்டு சிகிச்சை!

ld31கூந்தல் ஆரோக்கியத்துக்கு உடல், மன மற்றும் மண்டைப் பகுதி மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.உடல் சுத்தம்மலச்சிக்கல்  இல்லாமலும் வயிற்றில் பூச்சிகள் இல்லாமலும் இருக்க வேண்டும். மலச்சிக்கல் இருந்தால் முடி வளர்ச்சி பாதிக்கப்படும். தினம் 3 லிட்டர் தண்ணீர்  குடிப்பது மலச்சிக்கலை நீக்கும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது கறிவேப்பிலையை பச்சையாக மென்று தின்பது கூந்தல்  ஆரோக்கியத்தைக் காக்கும். கர்ப்பப்பையில் பிரச்னைகள் இருந்தாலும் கூந்தல் வளர்ச்சி பாதிக்கும் என்பதால் அதற்கும் சரியான நேரத்து சிகிச்சை  அவசியம்.

மன சுத்தம்

டென்ஷன் இல்லாத அமைதியான மனநிலையே மனதை சுத்தமாக வைக்கும். பரபர லைஃப் ஸ்டைலை தவிர்த்து நிதானமாக எல்லாவற்றையும்  அணுகப் பழகுவதும் முக்கியம். யோகா, தியானம் போன்றவை இதற்கு உதவும்.

மண்டை சுத்தம்

மண்டையோட்டுப் பகுதியானது சுத்தமாக இருப்பதுதான் கூந்தல் வளர்ச்சிக்கு அடிப்படை. தினமுமோ, ஒரு நாள் விட்டு ஒருநாளோ கூந்தலை அலச  வேண்டும். மண்டையில் அழுக்கோ, தூசியோ, பிசுபிசுப்போ இருக்கக் கூடாது. தினசரி உபயோகத்துக்கு வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய ஷாம்பு

* பூந்திக்கொட்டை தூள், சீயக்காய் தூள், ஆலில் இலையைக் காய வைத்து அரைத்த தூள், எலுமிச்சை அல்லது ஆரஞ்சுப் பழத் தோலைக் காய  வைத்து அரைத்த தூள் எல்லாவற்றையும் தலா 200 கிராம் எடுத்துக் கொள்ளவும். 2 லிட்டர் தண்ணீரில் கரைத்து முதல் நாள் இரவே கொதிக்க  வைக்கவும். மறுநாள் அதை வடிகட்டி, பாட்டிலில் நிரப்பி வைத்துக் கொள்ளவும். இதை தினமும் தலைக்கு ஷாம்புவாக உபயோகிக்கலாம். ஒரு மாதம்  வரை கெடாது.

* சீயக்காய், நெல்லிமுள்ளி, பூந்திக்கொட்டை ஆகிய மூன்றையும் சம அளவு வாங்கி, 2 பங்கு தண்ணீரில் இரவு ஊற வைக்கவும். மறுநாள் காலை  அதைக் கொதிக்க வைத்து வடிகட்டவும். 3வது நாள் தலைக்கு ஷாம்புவாக உபயோகிக்கலாம். இது ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும்.  கர்ப்பப்பையில் பிரச்னைகள் இருந்தாலும் கூந்தல் வளர்ச்சி பாதிக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button