முகப் பராமரிப்பு

சரும சுருக்கங்கள் நீங்க சில டிப்ஸ்

முட்டை மற்றும் க்ரீம் மாஸ்க்:
முட்டையில் உள்ள பயோடின், புரதச்சத்து, மற்றும் வைட்டமின்கள் தோலை இறுகச் செய்து சுருக்கங்களை தடுக்க வல்லவையாகும். முட்டை கருவில் வயதாகுவதை தடுக்கும் சக்தியுள்ளது. இதன் க்ரீம் தோலை மென்மையாகவும் பொலிவாகவும் தோன்றச் செய்யும். ஒரு முட்டையுடன் அரை கோப்பை க்ரீம் எடுத்து கலந்து முகத்தில் மாஸ்க் போன்று போட வேண்டும். 15 நிமிடத்திற்கு பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த கலவையை தினமும் பயன்படுத்தினால் நல்ல மாற்றங்களை காண முடியும்.

வாழைப்பழம் மற்றும் கேரட் மாஸ்க்:

இந்த இரண்டையும் எவ்வாறு பயன்படுத்துவது என்று நீங்கள் நினைக்கலாம்? ஆனால் இவை மிகுந்த அற்புதங்களை செய்யும் பழங்களாகும். தோலை திடப்படுத்தவும் சுருக்கங்களை குறைக்கவும் தேவையான வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் இவ்விரண்டு பழங்களிலும் உள்ளன. தலா ஒரு வாழைப்பழம் மற்றும் ஒரு கேரட் வைத்து இவற்றின் பசையை தயாரித்து முகத்தில் தடவி 15 நிமிடத்திற்கு பின் வெது வெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

ரோஸ் வாட்டர்:
சருமத்தில் நிறைய அழுக்குகள் மற்றும் கழிவுகள் இருக்க வாய்ப்புகள் அதிகம். இவையும் சுருக்கங்களை உருவாக்கக் கூடும். தூங்கப் போகும் முன் ரோஸ் வாட்டரால் முகத்தை சுத்தம் செய்வது அழுக்குகளை நீக்கும். இதை பயன்படுத்துவதன் மூலம் கருவளையங்கள், வீக்கங்களை குறைத்து புதிய சருமத்தை உருவாக்கும். ஒரு பஞ்சு உருண்டை கொண்டு ரோஸ் வாட்டரில் நனைத்து, வட்ட வடிவில் முகத்தில் தடவ வேண்டும். இத்தகைய வட்ட அழுத்தங்கள் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கில் மிகச்சிறந்த ப்ளீச் செய்யும் சக்தியும், வயதை குறைவாகக் காட்டும் சக்தியும் உண்டு. தினமும் ஒரு துண்டு உருளைக்கிழங்கை எடுத்து முகத்தில் தேய்த்து வந்தால் வெயிலால் ஏற்படும் சரும பாதிப்பையும், சுருக்கங்களையும், மெல்லிய கோடுகளையும் நீக்க முடியும். உருளைக்கிழங்கை மாஸ்க் ஆகவும் பயன்படுத்த முடியும். ஒரு கிழங்கை மசித்து அதில் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை விட்டு முகத்தில் போட்டதும் 5-10 நிமிடங்கள் விட்டு விடவும். பின் குளிர்ந்த நீரால் கழுவவும். தொடர்ந்து இதை பயன்படுத்தினால் நல்ல வித்தியாசத்தை காண முடியும்.

தயிர் மாஸ்க்:

தயிரில் உள்ள வைட்டமின்கள் திசுக்களை சரி செய்து அதை மீண்டும் கட்டி எழுப்பும். தயிரை தினமும் உண்பதும் சருமத்திற்கு மிகுந்த நன்மையை தரும். தயிரில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து முகத்தில் தடவினால் அது முகத்திற்கு பொலிவூட்டி சுருக்கங்களை குறைக்கின்றது. இதை 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவவும். இத்தகைய வீட்டிலேயே செய்யக் கூடிய அழகு சாதன பொருட்களை கொண்டு செய்யப்பட்ட க்ரீம்களை பயன்படுத்தி அழகான மாற்றத்தை காணுங்கள்!
1419577428winter dry skin care

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button