கண்கள் பராமரிப்பு

ஐந்தே நாட்களில் கண்களின் கருவளையத்தை போக்க எளிய வழி

இன்றைய உலகில் உள்ள பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருவளையம். அதிக வேலைச் சுமையினால் போதுமான தூக்கம் கிடைக்காததால், கண்களைச் சுற்றி கருப்பான வளையங்கள் வருகின்றன. இவ்வாறு கருவளையங்கள் வருவதால், முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது. வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே வைத்தே கருவளைத்தை சுலபமாக போக்கலாம்.

கருவளையம் போவதற்கான எளிய வழிகள்:

வெள்ளரி, உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு துணியை பன்னீரில் நனைத்து கண்ணின் மீது வைத்து படுத்து தூங்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

2 துண்டு வெள்ளரிக்காயில், அரை டீஸ்பூன் உளுத்தம் பருப்பை 1 மணி நேரம் ஊறவைத்து அரைத்து, இதை தினமும் கண்களைச் சுற்றிலும் பூசி, 3 நிமிடம் கழித்து கழுவினால் கருவளையம் மறைந்து போகும்.

கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் மறைய திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த வழியை பயன்படுத்தி கண்களை சுற்றி உள்ள பகுதியில் கருவளையங்கள் வர விடாமல் தடுக்க முடியும்.

சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சிபெறும்.

எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாற்றை சம அளவு எடுத்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவி வந்தால், கருவளையங்கள் குறைந்துவிடும்

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம் Twitter மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.
eyes blackmark

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button