இனிப்பு வகைகள்

ஆப்பிள் அல்வா

தேவையானப்பொருட்கள்:

சிவப்பு ஆப்பிள் – 3
சர்க்கரை – ஒன்றரை கப்
நெய் – 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு – சிறிது

செய்முறை:

ஆப்பிளை நன்கு கழுவி, துடைத்து, தோல் சீவி, நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.
DSCN4433
அடி கனமான ஒரு வாணலியில் (நான் ஸ்டிக்காக இருந்தால் நல்லது) ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, அதில் முந்திரிப்பருப்பை வறுத்தெடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் மீதமுள்ள நெய்யை விட்டு, அரைத்து வைத்துள்ள ஆப்பிள் பழ விழுதைப் போட்டு வதக்கவும். அடுப்பை நிதானமான தீயில் வைத்து, விழுதிலுள்ள நீர்ச்சத்து வற்றி, சற்று கெட்டியானவுடன் (10 முதல் 15 நிமிடங்கள் வரை பிடிக்கும்), அதில் சர்க்கரையைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் அதில் கேசரி அல்லது ஆரஞ்சு வண்ணத்தைப் போட்டு, கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். அல்வா சற்று இறுகி, வாணலியில் ஒட்டாமல் வரும் பொழுது அதில் ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரிப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்தில் மாற்றி வைக்கவும்.
DSCN4414
இதை அப்படியே ஸ்பூனால் எடுத்தும் சாப்பிடலாம். அல்லது நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி விட்டு, ஆறியதும் சதுரத் துண்டுகளாக வெட்டி எடுத்தும் கொடுக்கலாம்.

கவனிக்க: ஆப்பிளை அரைத்து, அல்வா செய்வதற்குப் பதில், ஆப்பிளைத் தோல் சீவி, காரட் துருவது போல் துருவி, மேற்கண்ட முறையிலும் செய்யலாம். துருவி செய்தால், பார்ப்பதற்கு இப்படி இருக்கும்.
DSCN4407

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button