அழகு குறிப்புகள்நகங்கள்

கை விரல்கள்

ld419*நீண்ட விரல்களைப் பெற்ற பெண்கள் நகங்களை விரல்களோடு ஒட்டியிருக்கும் வண்ணம் வட்ட வடிவமாக வெட்டி விட்டால் அழகாக இருக்கும்.

*குட்டையான விரல்களைக் கொண்ட பெண்கள் கை விரல்களை விடச் சற்று  நீளமாக கூம்பிய  வடிவில் நகங்களை வெட்டிவிட்டால் அமைப்பாக இருக்கும்.

*குட்டையான   விரல் அமைப்பினைப் பெற்ற பெண்கள் நகங்களின் மையப் பகுதியை உள் இறங்கும் விதமாக சந்திர பிம்பம் போல வெட்டி விட்டால் பாந்தமாக இருக்கும்.

பூந்திக் கொட்டையைக் கொஞ்சம் வாங்கி நீரில் ஊற வைத்துக் தேய்த்தால் சோப்பு போன்று நுரை வரும். அந்த நுரையைக் கொண்டு நகங்களைச் சுத்தம் செய்தால் நகங்கள் பளிச்சென  சுத்தமாகவும், நல்ல  நிறமாகவும் இருப்பது கை விரல்களின் அழகை பெருக்கிக் காண்பிக்கும்.

*பாலைக் கொதிக்கச் செய்து இறக்கி பொறுக்கும் சூடாக இருக்கும் போது நகங்களை அதில் படுமாறு நனைத்து, சுத்தமாக பஞ்சைக் கொண்டு நகங்களை நன்கு தேய்த்து பாலிஷ் செய்தால் நகங்கள் நல்ல பளபளப்பைப் பெற்று மெருகு ஏறும்.

*பாதாம் எண்ணையை விரல் நகங்களில் தளரப் பூசி அரை மணி நேரம் வைத்திருந்து பிறகு கடலை மாவினால் கழுவி சுத்தம் செய்து வந்தாலும் நகங்கள் நல்ல பிரகாசத்துடன் காட்சியளிக்கும்.

*நகங்களுக்கு பளபளப்பையும், அழகையும் கொடுக்கும் வண்ணப் பாலீஷ் கலவைகள் இக்காலத்தில் விதவிதமாகக் கிடைக்கின்றன. நல்ல ஆழ்ந்த சிவப்பு வண்ணத்துடனும், நகத்தின் இயற்கை வண்ணம் மாறாமல், அதே நேரத்தில் நகங்களை பளபளப்பாக்கும் வகையிலும் நகப் பாலீஷ்கள் விற்பனையாகின்றன. அவற்றைப் பயன்படுத்தி நகங்களை  அழகுப்படுத்திக் கொள்ளலாம். பொதுவாக இலேசான வண்ண அமைப்புடன் கூடிய நகப் பாலிஷுகள் எல்லா உடல் நிறத்துக்கும் ஒத்து வரும். சிவந்த அல்லது வெளுப்பான உடல் நிறம் கொண்டவர்கள் நகங்களில் ஆழ்ந்த நிறங்களைப் பூசிக் கொண்டால் சில சமயம் மிக அழகாகத் தோன்றும். கருத்த உடல் நிறத்தைப் பெற்றவர்கள் ஆழ்ந்த வண்ணங்களைப் பிரதிபலிக்கும்  பாலிஷ்களையே பயன்படுத்த வேண்டும்.

*ஒவ்வொரு தடவையும் நகத்துக்கு வண்ணம் பூசும் போது முன்னால் பூசியிருக்கும் வண்ணத்தை அகற்றி விட்டால் தான் புதிதாகப் பூசுவது எடுப்பாக இருக்கும்.’பாலிஷ் ரி மூவர் ‘ என்ற பொருள் கடைகளில், கிடைக்கும். அதைப் பயன்படுத்தினால் மிகவும் எளிதாக பழைய நகப் பூச்சை அகற்றி விடலாம்.

*நகப்பூச்சிற்காக பல வண்ணங்களை யாவரும் உபயோகிப்பதில்லை. மேல்நாடுகளில் அன்றாடம் உடுக்கும் உடைக்கு ஏற்ப பல வண்ண நகப்பூசிகளை உபயோகிக்கிறார்கள். அதே முறையை நாமும் பின்பற்றலாம்.எனினும் இன்றளவும் பெண்கள் சிவப்பு நிறத்திலும், அதே நிறத்துடன் ஒத்தாகவும் உள்ள நகப்பூச்சிகளையே உபயோகி இருக்கிறார்கள்.இந்த பழக்கத்தை மாற்றி பச்சை, நீலம் போன்ற மாறுப்பட்ட வண்ண நகபூச்சிகளையும் சந்தர்பத்துக்கு ஏற்ப பயன்படுத்த முயலவேண்டும்.

Related posts

வெட்டிவேரை சேர்த்து குளிர வைத்து பிறகு வடிகட்டி கொள்ளவும். முகத்தை சுத்தம் செய்ததும் வெட்டிவேர் ஸ்ப்ரே செய்துகொள்ளவும்..

nathan

நீங்களே பாருங்க.! இந்த வயதிலும் மாடர்ன் உடையில் அசத்தும் நாட்டாமை பட நடிகை

nathan

நான்கு ராசிக்கு ஆண்டு முழுவதும் அடிக்கும் ராஜயோகம்

nathan

தேங்காயில் இருக்கும் பூவை உண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

காலையில் எழுந்ததும் இவற்றை செய்து பாருங்கள்!….

sangika

இதை நீங்களே பாருங்க.! மாடர்ன் உடையில் mass -ஆக இருக்கும் விருமாண்டி அபிராமி..!

nathan

உங்களுக்கு தெரியுமா ப்ராக்கோலி தரும் 10 ஆரோக்கியமான நன்மைகள்!!

nathan

இடுப்பு,வயிறு அழகாக இருக்க

nathan

மென்மையான கைகளை பெறுவதற்கு……

nathan