24.6 C
Chennai
Friday, Dec 27, 2024
kerala style mealmaker masala 1672995795
சமையல் குறிப்புகள்

சுவையான கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் மசாலா

தேவையான பொருட்கள்:

மீல் மேக்கரை வேக வைப்பதற்கு…

* மீல் மேக்கர் – 1 1/2 கப்

* தண்ணீர் – தேவையான அளவு

* உப்பு – 1 டீஸ்பூன்

மசாலா பவுடருக்கு..

* சீரகம் – 1 டீஸ்பூன்

* மல்லி – 1 டீஸ்பூன்

* மிளகு – 1 டீஸ்பூன்

* சோம்பு – 1 டீஸ்பூன்

* பட்டை – 1 இன்ச்

* ஏலக்காய் – 4

* பிரியாணி இலை – 1

* தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)

* வரமிளகாய் – 6

தாளித்து வதக்குவதற்கு…

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* வெங்காயம் – 1/2 (நறுக்கியது)

* பூண்டு – 5 பல்

* தக்காளி – 1 (நறுக்கியது)

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* உப்பு – 1/2 டீஸ்பூன்

* தண்ணீர் – 1 கப்

* குடைமிளகாய் – சிறிது

* கறிவேப்பிலை – சிறிது

* தக்காளி சாறு – 2 டேபிள் ஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிதுkerala style mealmaker masala 1672995795

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கரைப் போட்டு, அதில் போதுமான அளவு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, உப்பு சேர்த்து, 10 நிமிடம் மீல் மேக்கரை வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, குளிர்ந்த நீரால் மீண்டும் மீல் மேக்கரை அலசி, அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, மிளகு, சோம்பு சேர்க்க வேண்டும்.

* பின் அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, வரமிளகாய் சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.

* அதன் பின் துருவிய தேங்காயை சேர்த்து தேங்காயில் உள்ள நீர் வற்றும் வரை வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் ஒரு நறுக்கிய தக்காளியை போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி, 1 கப் நீரை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.

* பின்னர் அதில் வேக வைத்துள்ள மீல் மேக்கரைப் போட்டு கிளறி சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.

* இறுதியாக அதில் குடைமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் தக்காளி சாஸ் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான கேரளா ஸ்டைல் மீல் மேக்கர் மசாலா தயார்.

Related posts

முட்டை ஆம்லெட் குழம்பு

nathan

மலபார் மட்டன் ரோஸ்ட்

nathan

அரைக்கீரை கடைசல்

nathan

முருங்கைக்கீரை புலாவ் ரெடி….

sangika

வீட்டிலேயே பன்னீர் செய்வது எப்படி?

nathan

சுவையான வெஜிடேபிள் குருமா

nathan

கோபி மஞ்சூரியன் ரெசிபி

nathan

பூண்டு சிக்கன் சாதம் செய்வது எப்படி?

nathan

சுவையான தக்காளி தொக்கு

nathan