ஆரோக்கியம் குறிப்புகள்

குங்குமப்பூவே… சிவப்பு நிறமே!

குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பது உண்மையா?

ஐயம் தீர்க்கிறார் மகப்பேறு மருத்துவர் மீனலோச்சனி நம் சருமப் பகுதியில் இருக்கும் மெலனின் (Melanin) என்ற நிறமிகள்தான் நம்முடைய நிறத்தைத் தீர்மானிக்கின்றன. மெலனின் அதிகமாக இருந்தால் கருப்பாகவும், குறைவாக இருந்தால் சிவப்பாகவும் நமது தோற்றம் அமையும். உடலின் நிறம் முழுக்க முழுக்க பரம்பரை ரீதியான காரணங்களாலேயே அமைகிறது. சரும நிறத்தோடு, கண்களின் நிறம், முடியின் நிறம் என பிற விஷயங்களையும் பரம்பரைத் தன்மையே தீர்மானிக்கிறது.

குழந்தைகளின் சரும நிறத்தை கர்ப்பிணிகள் சாப்பிடும் குங்குமப்பூவால் மாற்ற முடியாது என்பதே உண்மை. தாயின் செரிமானத்துக்கு வேண்டுமானால் குங்குமப்பூ உதவக்கூடும். மற்றபடி, குங்குமப்பூவால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்பதற்கு மருத்துவரீதியாக எந்த ஆதாரமும் கிடையாது. குங்குமப்பூவின் சிவந்த நிறம் இதுபோன்ற நம்பிக்கையை மக்களிடம் உருவாக்கியிருக்கலாம். மனைவியின் மீது, குழந்தையின் மீதுள்ள அன்பு காரணமாக குங்குமப்பூ வாங்கிக் கொடுக்க நினைத்தால் தரமான குங்குமப்பூவை வாங்கிக் கொடுங்கள்.

இந்தியாவில் காஷ்மீர் போன்ற சில இடங்களில் மட்டுமே குங்குமப்பூ விளைகிறது. மற்றவை எல்லாம் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதால் குங்குமப்பூவின் விலை அதிகமாகவே இருக்கும். விலை குறைவாக இருக்கிறது என்பதற்காகத் தரமில்லாத குங்குமப்பூவை வாங்கி கர்ப்பிணிகளுக்குக் கொடுப்பது தேவையில்லாத சிரமங்களை உருவாக்கி விடும்!
saffron hair benefits

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button