26.7 C
Chennai
Friday, May 17, 2024
bc3ca pt 1
Other News

பொய் சொல்லும் இந்தியா !சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதாக கூறுவது தவறு-சீன மூத்த விஞ்ஞானி

இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கியது, அங்கு அது 14 நாட்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது. இந்நிலையில், விக்ரம் லேண்டர் இறங்கும் பகுதியில் இரவு தொடங்கிய நிலையில், சூரிய வெளிச்சம் இல்லாததால் ரோவர் மற்றும் லேண்டரின் பணி நிறுத்தப்பட்டது. விக்ரம் லேண்டரைப் புதுப்பிக்கும் பணியில் விஞ்ஞானிகள் பகல் நேரத்துக்குப் பிறகும் தொடர்ந்து பணியாற்றினர். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, லேண்டரை உயிர்ப்பிக்க முடியவில்லை. வெப்பநிலை -200 டிகிரி செல்சியஸ் ஆக இருந்ததால் லேண்டர் செயலிழந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்தியாவின் சந்திரயான்-3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியதாக கூறுவது தவறு என சீன மூத்த விஞ்ஞானி வாங் ஜுன் கருத்து தெரிவித்துள்ளார்.

தென் துருவத்தில் இருந்து 619 கி.மீ தொலைவில் சந்திரயான் தரையிறங்கியதாகவும், ஆனால் அதை நிலவின் தென் துருவமாக கருத முடியாது என்றும் அவர் கூறினார்.

இதுபற்றி “விஞ்ஞானப் பிரச்சாரர்“ன் முதன்மை ஆய்வாளர் திரு.டி.வி.வெங்கடேஸ்வரனிடம் கேட்டோம்.

”தென் துருவம் என்பது ஒரு புள்ளி. அதே போல் பூமியில் வடதுருவம், தென்துருவம் என்பது ஒரு புள்ளியை தான் குறிக்கும். உதாரணத்திற்கு நார்வே வடதுருவ நாடு அல்ல.. வடதுருவ பகுதி நாடு.

 

அதே போல் தான் சந்திரயான் தென் துருவப்பகுதியில் தான் இறங்கியது. தென் துருவப்புள்ளியில் இல்லை. ஆகவே.. தென் துருவம், தென் துருவப்பகுதி இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. ” என்று கூறினார்.

ஆகவே… இனி நாம் தென் துருவப் பகுதியில் சந்திரயான் 3 இறங்கியது என்று சொல்வதே சரியானதாக இருக்கும்

Related posts

தினேஷுக்கு எதிராக களம் இறங்கிய ரட்சிதா மஹாலட்சுமி.!

nathan

விஜய்யுடன் டான்ஸ் ஆடும் அஜித்… AI தொழிநுட்பத்தில்

nathan

கல்யாணத்தை வெறுக்க இதுதான் காரணம்.. அனுயா ஓபன் டாக்..!

nathan

ஜீன்ஸ் பட ஐஸ்வர்யா ராய் போல மாறிய பிக் பாஸ் ஜனனி

nathan

சென்னைக்கு திரும்பிய தளபதி… அப்புறம் என்ன, அடுத்து லியோ இசை வெளியீட்டு விழாதான்

nathan

காதலருடன் கோவிலில் நடிகை ஜான்வி கபூர்

nathan

உங்களின் ராசிப்படி உங்களுடைய சிறந்த குணம் என்ன?

nathan

அடேங்கப்பா! செம அழகான லுக்கில் ரம்யா நம்பீசன்.. ரசிகர்களை கவர்ந்த அழகிய புகைப்படங்கள்.!!

nathan

எவரெஸ்ட் உச்சியில் ஏறி வெற்றிக்கொடிய நாட்டிய முதல் தமிழ் பெண்

nathan