சரும பராமரிப்பு

கோடைகாலத்தில் சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் ஃபேஸ் பேக்குகள்

கோடைகாலத்தில் சரும நிறத்தை பாதுகாக்க பழங்களை ஃபேஸ் பேக்குகளாக பயன்படுத்தி கருமையை போக்கலாம்.

கோடைகாலத்தில் சருமத்தை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் ஃபேஸ் பேக்குகள்
சரும செல்களை குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள, கோடையில் ஒருசில ஃபேஸ் பேக்குகளைப் போடுவது நல்லது.

* கோடையில் மாம்பழம் அதிகம் கிடைக்கும். அத்தகைய மாம்பழத்தின் கூழ் 1 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் கோல்ட் க்ரீம், 1 டேபிள் ஸ்பூன் குளிர்ந்த பால் சேர்த்து நன்கு கலந்து, முகம், கை, கால்களுக்கு தடவி உலர்ந்ததும் கழுவ வேண்டும். இதனால் கோடையில் சருமத்தின் நீர்ச்சத்தை தக்க வைக்கலாம்.

* கோடையில் தர்பூசணியை வாங்கிச் சாப்பிடுவோரின் எண்ணிக்கை தான் அதிகம். உங்கள் வீட்டில் தர்பூசணி இருந்தால், 1/2 கப் தர்பூசணி கூழ் உடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகம், கை, கால்களில் தடவி உலர வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

* 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகம், கை, கால்களில் தினமும் தடவி வந்தால், வெயிலால் ஏற்பட்ட கருமையைப் போக்கலாம்.

* கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது சருமத்தின் தரத்தை மேம்படுத்தும். ஒரு பௌலில் 1/2 கப் கிவி சாற்றினை எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பால், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, கை, கால், முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். குறிப்பாக இந்த ஃபேஸ் பேக் சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றது.

* தயிர் சரும நிறத்தை அதிகரிக்க உதவும். அத்தகைய தயிரை கோடையில் வாரத்திற்கு இரண்டு முறை கை, கால், முகத்திற்கு தடவி உலர வைத்து கழுவினால், சருமத்துளைகள் சுத்தமாகி, சரும பொலிவு மேம்படும்.

* வெள்ளரிக்காயும் கோடையில் அதிகம் கிடைக்கும். அத்தகைய வெள்ளரிக்காயை ஒன்று வாங்கி அரைத்து சாறு எடுத்து, அத்துடன் 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த பால் கொண்டு துடைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இதனால் சரும செல்கள் புத்துணர்ச்சிப் பெறும்.

* ஒரு அன்னாசி பழத் துண்டை அரைத்து சாறு எடுத்து, அதனை முகம், கை, கால்களில் தடவி உலர்ந்ததும் ரோஸ் வாட்டர் கொண்டு துடைத்து, பின் 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் சரும எரிச்சல் தடுக்கப்படும்.
201604071211267436 Face packs help keep skin cooler in summer SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button