அசைவ வகைகள்

நண்டு ஃப்ரை

சளி தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த நண்டு ஃப்ரை செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

நண்டு ஃப்ரை
நண்டு ஃப்ரை
தேவையான பொருட்கள் :

சதைப்பற்றுள்ள நண்டு – 4
எலுமிச்சை சாறு – பாதி பழம்
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
பூண்டு விழுது – ¼ தேக்கரண்டி
மிளகுத்தூள் – ¼ தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – ½ – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* நண்டை நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகு நண்டுடன் மிளகாய்த் தூள், மிளகுத் தூள், மஞ்சள் தூள், பூண்டு விழுது, தேவையான உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து பிசறி ஊற வைக்கவும்.

* அடுப்பில் நான்ஸ்டிக் தவாவை வைத்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் மசாலாவுடன் சேர்த்து பிரட்டி ஊற வைத்திருக்கும் நண்டை போட்டு முன்னும் பின்னுமாக பிரட்டு, மூடி போட்டு இரண்டு பக்கமும் நன்றாக வேகும் வரை வதக்கி வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

* சுவையான நண்டு ஃப்ரை ரெடி.
201604091406353306 crab Fry SECVPF

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button