2
உடல் பயிற்சி

கொழுப்பை குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவும் பயிற்சி

பொதுவாக ஆண்களுக்கு 1600 முதல் 2000 கலோரிகளும், பெண்களுக்கு 1200 முதல் 1600 கலோரிகளும் தினமும் தேவைப்படுகிறது. இவற்றை எரிப்பதற்கு வசதியாக தசைத் திசுக்களின் அளவை அதிகரிக்க வேண்டும். கை, கால்களுக்கு பயிற்சி கொடுத்து வந்தாலே தசைத் திசுக்கள் அதிகரிக்கும்.

இதனால் கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும். சிலர் உடற்பயிற்சி இல்லாததால் உடல் எடை அதிகரித்து உடற்பருமனால் அவதிபடுவார்கள். அவர்கள் நடத்தல், நீந்துதல், ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், ஏரோபிக் பயிற்சி போன்றவற்றில் ஈடுபடலாம். 15 நிமிடங்கள் நடை பயிற்சி மேற் கொண்டாலே போதும் சுமார் 60 கலோரிகள் வரை எரிக்கப்படும்.

அதிலும் காலைப் பொழுதில் நடந்தால் உடம்பில் இருக்கும் கொழுப்பு விரைவில் எரிக்கப்படும். இதய நோய் இருப்பவர்களும், கால் மூட்டு பிரச்சனை இருப்பவர்களும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

சாப்பிட்டவுடன் படுத்துவிடாமல் சிறிது தூரம் நடந்துவிட்டுப் படுத்தால் ஜீரணத்திற்கு உதவியாகவும், காலையில் எழும்போது மந்தத்தன்மை இல்லாமலும் இருக்கும். கொழுப்பும் தேங்காது. நடப்பதற்கு வாய்ப்பில்லாதவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தாலே போதும் அதுவே சில கலோரிகளை எரிக்க உதவுகிறது.

தோட்டம் இருந்தால் காலையிலோ மாலையிலோ சிறு சிறு வேலைகளைச் செய்யலாம். இதேபோல, பக்கத்தில் இருக்கும் கடைக்குக்கூட பைக்கை எடுத்துச் செல்வதைத் தவிர்த்துவிட்டு நடந்து சென்று அவற்றை வாங்கி வரலாம். அலுவலகத்தில் லிஃப்டுகளைப் பயன்படுத்தாமல் படிகளின் மூலம் ஏறி இறங்குவதாலும் கூட தேக்கிவைக்கப்பட்ட கொழுப்பு வேகமாக எரிக்கப்பட்டு உடல் நலம் சீராகும்.

இவ்வாறாக அன்றாட வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும் உடம்பில் கொழும்பபுச் சத்து சேராமல் பார்த்துக் கொள்ளலாம். உடற்பருமனையும் தவிர்த்துவிடலாம்.
2

Related posts

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் செய்ய வேண்டிய நடைப்பயிற்சி

nathan

தொப்பையா? கவலையே வேண்டாம் தினமும் இதை செய்யுங்க…..

sangika

ஆண்மையை அதிகப்படுத்தும் ஆசனம்

nathan

உடல் எடையை குறைக்கும் வெண்பூசணிக்காய் சாறு

nathan

வாயு தொந்தரவை தீர்க்கும் ஜானு சிரசாசனம்

nathan

ரஷ்யன் ட்விஸ்ட் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பயன்கள்

nathan

ஈஸியாக செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்

nathan

மனஅமைதி, மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு!…

sangika

பெண்கள் ஒரே மாதத்தில் அதிகளவு எடையை குறைக்கும் உணவு முறைகள்

nathan