முகப் பராமரிப்பு

நீங்கள் கருப்பாக இருக்கிறீர்களா? கவலை வேண்டாம்

ஒவ்வொருவருக்குமே தாம் வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். குறிப்பாக தென்னிந்தியர்களுக்கு இந்த ஆசை நிச்சயம் இருக்கும். இந்த ஆசையின் காரணமாக பல்வேறு க்ரீம்களைப் பயன்படுத்துவோம். ஆனால் அப்படி பயன்படுத்தும் ஃபேர்னஸ் க்ரீம் மூலம் சருமத்தின் நிறம் அதிகரிக்கிறதோ இல்லையோ, சருமத்தின் ஆரோக்கியம் கெட்டு, ஒருநாள் அந்த க்ரீம்மைப் பயன்படுத்த தவறினாலும், சருமம் ஆரோக்கியமின்றி ஒருவித வறட்சியுடன் பொலிவிழந்து காணப்படும். எனவே எப்போதுமே நம் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைக்கு கெமிக்கல் கலந்த க்ரீம்களின் மூலம் தீர்வு காண நினைக்காமல், நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டேப் பெற முயலுங்கள். இதனால் சரும பிரச்சனை நீங்குவதோடு, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும். –

இங்கு சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் இயற்கைப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றி வந்தால், உங்கள் சருமத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வாழைப்பழம்
சருமத்தின் நிறத்தை அதிகரிக்க வாழைப்பழம் மிகவும் உதவியாக இருக்கும். அதுவும் வாழைப்பழம் ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து நல்ல பாதுகாப்பு வழங்கி, முதுமையைத் தடுக்கும். அதற்கு வாழைப்பழத்தை மசித்து முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வேண்டுமானால் இறுதியில் ஐஸ் கட்டியால் முகத்தை மசாஜ் செய்யலாம். இதனால் சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதைத் தடுக்கலாம்.

ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக நிறைந்துள்ளதால், அதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமம் பாதிப்படைவதைத் தடுக்கலாம். அதுமட்டுமின்றி, ஆரஞ்சு ஜூஸ் சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும் உதவும். அதற்கு ஆரஞ்சு ஜூஸ் 4 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

வெள்ளரிக்காய்
1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றில் 2 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவலாம் அல்லது வெள்ளரிக்காய் ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் மற்றும் ரோஸ் வாட்டரை ஒன்றாக கலந்து, முகத்தல் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவவும் செய்யலாம். இவற்றின் மூலமும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம்.

தயிர்
தயிரை தினமும் முகத்தில் தடவி வருவதன் மூலமும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை முழுமையாக நீக்கி சரும நிறத்தை மேம்படுத்தலாம். மேலும் தயிரில் லாக்டிக் ஆசிட் நிறைந்துள்ளதால், அவை சருமத்தின் பொலிவை அதிகரிப்பதோடு, மென்மையையும் மேம்படுத்தும்.

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு மிகவும் சிறப்பான ப்ளீச்சிங் ஏஜென்ட் எனலாம். எனவே உருளைக்கிழங்கை அரைத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், சருமத்தில் உள்ள தழும்புகள், கரும்புள்ளிகள், முகப்பருக்கள், இறந்த செல்கள் போன்றவை நீங்கி, முகத்தின் பொலிவு மற்றும் நிறம் மேம்படும்.

தக்காளி ஜூஸ்
தக்காளி ஜூஸில் வைட்டமின்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. இந்த வைட்டமின்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஒருவேளை உங்களுக்கு சருமத்தின் நிறம் அதிகரிக்க வேண்டுமானால், 2 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸில், 3 டீஸ்பூன் மோர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி, உலர வைக்க வேண்டும். இந்த செயல்முறையின் மூலமும் சருமத்தை வெள்ளையாக மாற்றலாம்.
12661817 898385060277813 6320213029484754984 n

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button