சரும பராமரிப்பு

பெண்களுக்கான சின்ன..சின்ன டிப்ஸ்..

உங்களுக்கு கன்னங்களில் சிவப்பு நிறத்தில் முகப்பரு புள்ளி புள்ளியாக இருக்கிறதா?

சூடான மற்றும் மசாலாக்கள் கலந்த உணவுப் பொருட்களை அவாய்டு பண்ணி விடுங்கள். வெயிலில் அலையாதீர்கள். “வாட்டர் பேஸ்டு மேக்கப்” போட்டுக் கொள்ளுங்கள். ஆயில் மேக்கப்பைத் தவிர்த்து விடுங்கள். சுடுநீரில் தலைக்குக் குளிக்காதீர்கள் உடலைக் கூலாக வைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு தலைமுடி சுருள் சுருளாக அடங்காப் பிடாரியாக உள்ளதா?

இப்படிப்பட்ட முடியைக் கொண்ட பெண்கள் தலைக்குக் குளித்தவுடனே முடியில் ஆலுவேரா ஜெல்லைத் தடவி 30 நிமிடங்கள் ஊற வைத்து அலசி விடுங்கள் போதும்.

சோப், ஃபேஷ் வாஷ் என்று எதையும் ஏற்றுக்கொள்ளாத சென்சிட்டிவ் ஸ்கின் உங்களுடையதா?

ஹைப்போ அலர்ஜெனிக் சோப் மற்றும் ஃபேஷ் வாஷை பயன்படுத்த ஆரம்பியுங்கள். தவிர வாட்டர் பேஸ்டு மாய்ஸ்ரைஸரை தொடர்ந்து யூஸ் செய்யுங்கள். உங்கள் சருமத்தில் சுருக்கம் விழுந்து விட்டதா?

டோன்ட் வொர்ரி.. முகத்திலும், கழுத்திலும் தேனை அப்ளை செய்து வட்டமாக மேல் நோக்கி மசாஜ் செய்யுங்கள். பிறகு அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை வாஷ் செய்து விடுங்கள். தொடர்ந்து இப்படியே செய்து வர உங்களுடைய சரும ஈரப்பதத்தை, தேன் சரி செய்து சரும சுருக்கத்துக்கு குட்பை சொல்லிவிடும்.

டிரை ஸ்கின் உள்ளவர்கள் ஃபேஷியல் செய்தால், அவர்கள் சருமம் இன்னும் வறண்டு போய்விடும். இந்தப் பிரச்சனை உங்களுக்கு இருக்கிறதா?

கெமிக்கல் ஃபேஷ’யலை அவாய்டு செய்து விட்டு, அதற்குப் பதில் பாலில் அரிசி மாவைக் குழைத்து முகத்தில் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து தேய்த்து கழுவி விடுங்கள். டெட் செல்லும் ரிமூவாகும். சருமமும் டிரை ஆகாது.

உங்களுடைய புருவமும், கண் இமையும் அடர்த்தியாக இல்லையா?

கவலையை விடுங்கள். விட்டமின் “ஈ” ஆயில், ஆலிவ் ஆயில் அல்லது பாதாம் ஆயிலில் ஏதோவொன்றைத் தொடர்ந்து புருவத்திலும், கண் இமைகளிலும் தடவி வாருங்கள் போதும். ஆனால் உங்கள் புருவமும், கண் இமைகளும் மெல்லியதாக இருப்பது பரம்பரையாக வருவதென்றால், இந்த ஆயில் ட்ரீட்மெண்ட் அதிகம் சக்ஸஸ் ஆகாது.

உங்களது சருமம் மென்மையாக மாற வேண்டுமா ?

பாசிப் பருப்பு அல்லது கடலைப் பருப்பை “நற நற”வென அரைத்து தயிருடன் மிக்ஸ் செய்து, முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவி விடுங்கள். சருமத்தில் உள்ள இறந்த செல்லெல்லாம் நீங்கி சருமம் சாஃப்ட்டாகி விடும்.

“ட்ரை ஸ்கின்” உள்ள எனக்கு எந்த சைட் எஃபெக்ட்டும் இல்லாத “வெஜிடபிள் ஃபேஸ்பேக்” இருக்கிறதா என்று கேட்பவரா நீங்கள்?

பீட்ருட்டை வேக வைத்து மசித்து, இத்துடன் ஓட்ஸ் மீலைக் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்து விடுங்கள். ட்ரை ஸ்கின்னும் ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.natural homemade turmeric face packs

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button