சட்னி வகைகள்

ருசியான எள்ளு சட்னி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

* எள்ளு – 2 டேபிள் ஸ்பூன்

* துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்

* பூண்டு – 4 பற்கள்

* இஞ்சி – 1 இன்ச்

* வரமிளகாய் – 5-7

* புளி – 1 சிறிய துண்டு

* நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப1 sesamechutney

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், எள்ளு விதைகளைப் போட்டு 2 நிமிடம் குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.

Sesame Chutney Recipe In Tamil
* பின் அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

* பின்பு அதில் வரமிளகாய், புளி சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* இறுதியாக வதக்கியதை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்தால், ருசியான எள்ளு சட்னி தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button