பழரச வகைகள்

ஆப்பிள் பேரிச்சம் பழ மில்க் ஷேக்

மாலையில் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஏதேனும் மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலுக்கு நீர்ச்சத்துடன், இதர சத்துக்களையும் பெறலாம் அல்லவா? அதிலும் ஆப்பிள் மற்றும் பேரிச்சம் பழத்தைக் கொண்டு மில்க் ஷேக் செய்து குடித்தால், உடலின் வலிமை இன்னும் அதிகரிக்கும்.

இங்கு அந்த ஆப்பிள் பேரிச்சம் பழ மில்க் ஷேக் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் – 1
பால் – 1 கப்
பேரிச்சம் பழம் – 4-5
சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை: முதலில் பேரிச்சப்பழத்தில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, அதனைப் பாலில் போட்டு 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஆப்பிளை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டுக் கொள்ளவும். பின் அதில் பாலுடன் கூடிய பேரிச்சம் பழம் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், ஆப்பிள் பேரிச்சம் பழ மில்க் ஷேக் ரெடி!!!

apple milkshake 18 1460981471

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button