மருத்துவ குறிப்பு

இனி, உங்கள் நினைவுகளை ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் – ஆராய்ச்சியில் கண்டுப்பிடிப்பு!!!

கடந்த சில ஆண்டுகளாகவே, மருத்துவ உலகில் ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் மூளையில் எவ்வாறு நினைவுகள் சேமிப்பு ஆகிறது என்பதைப் பற்றி தீவரமாக ஆராய்ந்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன்பு ஏறத்தாழ மனிதனின் மூளையில் நினைவுகள் சேமிப்பாகும் செயல் முறைப் பற்றிக் கண்டறந்தனர்.

இப்போது அதன் அடுத்தக் கட்டமாக, நினைவுகள் சேமிப்பாகும் மாதிரி வடிவங்கள் மற்றும் அதன் பின்னணியில் இருக்கும் கணிதக் கோட்பாடுகள் குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

இதன் மூலமாக, இனி வரும் நாட்களில் ஓர் மனிதனின் நினைவுகளை ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும், ஏன் மாற்றவும் முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்…..

கணிதக் கோட்பாடு

மனித மூளை இயக்கத்தின் பின்னணியில் இருக்கும், நினைவுகளின் சேமிப்பு மற்றும் இழப்புக் குறித்த கணிதக் கோட்பாட்டை ஆராய்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நினைவுகளை மீட்டெடுத்தல்

இந்த கணிதக் கோட்பாட்டின் மூலம், இழந்த நினைவுகளை மீட்டெடுக்க முடியும் என்றும், இது மிக துல்லியமாக செயல்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

அதிர்ச்சிகரமான….

இதன் மூலம் மருத்துவர்கள், ஓர் மனிதனின் மூளையில் தேங்கியிருக்கும் எந்த ஒரு தகவலையும் அழிக்க முடியும், மாற்ற முடியும். இது மிகவும் அதிர்ச்சிகரமானது.

சுவிட்சர்லாந்து ஆராய்ச்சி மையம்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த எக்கோல் பாலிடெக்னிக் ஃபெடெரல் டே லௌசேன்னே (Ecole Polytechnique Federale de Lausanne – EPFL) எனும் ஆராய்ச்சி மையம் தான் வெற்றிகரமாக இந்த ஆராய்ச்சியை செய்து முடித்துள்ளது.

இணைவளைவுகள்

ஆராய்ச்சியின் போது இவர்கள், மூளையில் எவ்வாறு நினைவுகள் சேமிப்பாகிறது என்றும். சேமிப்பு ஆகும் முறையான, மூளையில் நினைகளை உருவாக்கும் சிறப்பு இணைப்புகளான இணை வளைவுகள் குறித்தும் கண்டறிந்துள்ளனர்.

நியூரான்கள்

நமது மூளையில் நியூரான்களில் இருந்து உருவாகும் ஓர் சிறப்பு இணைப்பான் இணைவளைவுகளினால் தான் நினைவுகள் சேமிக்கப்படுகின்றன.

கோட்பாடு வழிமுறை

இந்த ஆராய்ச்சியின் முடிவில், ஆராய்ச்சியாளர்கள் ஓர் கணிதக் கோட்பாடு (complex algorithm) வழிமுறையைக் கண்டறிந்துள்ளனர். இதன் மூலமாக தான், இழந்த நினைவுகளை மீட்டெடுக்கவும், இருக்கும் நினைவுகளை அழிக்கவும், மாற்றவும் முடியும் என்கின்றனர்.

சோதனைத் தொடக்கமாக….

பாரீஸ், பிரான்சு நாடுகளில் இந்த முறையை வைத்து தூங்கிய நிலையில் இருந்த எலியின் மூளையில் அதன் தினசரி நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளனர்.

விரைவில்…..

கூடிய விரைவில் இது மனிதர்களின் இடையே சோதிக்க போவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர். இதன் மூலம் ஞாபக மறதியை குணப்படுத்த முடியும் என்ற போதும். இது மனித வாழ்வியலை சீர்குலைக்கவும் நூறு சதவீத வாய்ப்புகள் இருக்கின்றன.

20 1432091843 9

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button