Other News

வாழ்க்கையை நாசமாக்கியது கவுண்டமணி தான்.!

எனது திரையுலக வாழ்க்கையை அழித்ததற்கு நகைச்சுவை நடிகர் கவுண்டமணிதான் காரணம் என்று அவருடன் இணைந்து நடித்த பிரபல நடிகை ஷர்மிலி குற்றம் சாட்டியுள்ளார். அதாவது 90களில் தமிழ் படங்களில் கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷர்மிலி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து பிரபலமானார்.

கவுண்டமணியில் மட்டும் 27 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இப்போது சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி இருக்கிறேன். சமீபத்தில், ஷர்மிலி பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். நான் இப்போது மகிழ்ச்சியாக திருமணமாகி இருக்கிறேன். என் கணவர் என்னை கவனித்துக்கொள்கிறார். நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை, ஆனால் 40 வயதிற்குப் பிறகு, எனக்கு ஒரு துணை தேவை என்பதை உணர்ந்தேன், அதனால் நான் திருமணம் செய்து கொண்டேன், இப்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன்.

மேலும் குரூப் டான்சராக இருந்த நான் பொண்டாட்டி சொன்னா கேட்கணும், எங்க வீட்டு வேலன் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன் அப்பொழுதுதான் கவுண்டமணிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று அழைப்பு வந்தது எனது காமெடி எல்லாம் வராது அதுவும் இல்லாமல் அவர் வயசு என்ன என் வயசு என்ன என்று மறுத்துவிட்டேன் அதன் பிறகு கவுண்டமணிக்கு ஜோடியாக கிட்டத்தட்ட 27 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறேன்.

கவுண்டமணியுடன் பணியாற்றியதால் நான் பிரபலமானேன், ஆனால் அவருடன் பணிபுரிந்ததால் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தேன், மேலும் அவர் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தார் என்பதில் வேறு கருத்து இல்லை. வீரா படத்தில் ரஜினியுடன் நடிக்க எனக்கு ஒரு பாடலை புக் செய்திருந்தார்கள், ஆனால் அதே நாளில் எனக்கு தேதி கொடுக்கப்பட்டதால் நடிக்க முடியவில்லை என்று  கூறினார்.

இதனால் கவுண்டமணியிடம் கேட்டு ஷூட்டிங்க்கு தேதி புக் செய்யும் நிலைமையாகிவிட்டது ஒரு கட்டத்தில் பத்திரிக்கையாளர்களும் ஷர்மிலி கவுண்டமணி உடன் மட்டும்தான் நடிப்பார் என எழுத ஆரம்பித்து விட்டார்கள். இதனால் நான் கவுண்டமணிக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன் நான் அப்படி சொல்லி விட்டதால் டென்ஷனான கவுண்டமணி புக்காகி இருந்த அனைத்து படங்களில் இருந்து என்னை தூக்கிவிட்டார் இதுபோன்று பல படங்களில் நடிக்க இருந்த என்னை நீக்கி என் பொழப்பை கெடுத்து வாழ்க்கையை நாசமாக்கியது கவுண்டமணி தான் என்று ஷர்மிலி பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

Related posts

இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா அல்லது கெட்டதா?தெரிஞ்சிக்கங்க…

nathan

நடிகை விஜயலட்சுமியின் புகார் ஊட்டி விரைந்ததனிப்படை போலீசார்

nathan

சென்னையில் இருந்து அயோத்திக்கு ராமர் கோயிலுக்கு நேரடி விமான சேவை

nathan

கையும் களவுமாக பிடித்ததா கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்த கணவன்

nathan

புதிய அவதாரம் எடுக்கும் டாடா நானோ கார்

nathan

குரு ராஜயோகத்தை பெறப்போகும் ராசி

nathan

போதைப்பொருளுக்காக சிறுநீரகத்தை விற்ற நபர்

nathan

ஒரே நேரத்தில் இருவருக்கு காதல் வலையை வீசிய சூனியக்காரி.!

nathan

பின்பக்கம் கழண்டு வந்த புடவை.. இது தான் Fashion-ஆம்..

nathan