பிஸ்கட் மற்றும் குக்கீஸ்

பீநட் பட்டர் ஓட்ஸ் குக்கீஸ்

தேவையான பொருட்கள்
ஓட்ஸ் – ஒன்றை கப்
சர்க்கரை – ஒரு கப்
வெண்ணெய் – கால் கப்
பால் – கால் கப்
உப்பு – ஒரு சிட்டிகை
அலங்கரிக்க:
முந்திரி – தேவைகேற்ப
பாதாம் – தேவையான அளவு
கோக்கோ பவுடர் – இரண்டு டீஸ்பூன்
வேர்கடலை – அரை கப் (வறுத்தது)
பட்டர் – ஒரு டீஸ்பூன்

பீநட் பட்டர் செய்முறை:
வறுத்த வேர்கடலை அரை கப் எடுத்து அதை கோரகோரவென பொடி செய்து கொள்ளவும்.
பின், அதில் ஒரு சிட்டிகை உப்பு, ஒரு டீஸ்பூன் சர்க்கரை மற்றும் பட்டர் ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாக கிளறவும்.

செய்முறை
அடுப்பில் கடாய் வைத்து சர்க்கரை, பால், வெண்ணெய் சேர்த்து மூன்று நிமிடம் கைவிடாமல் கிளறவும்.
பிறகு, பீநட் பட்டர் சேர்த்து ஒருசேர இரண்டு நிமிடம் கிளறவும்.
அதனுடன், கோக்கோ பவுடர், உப்பு சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறவும்.
பின், ஓட்ஸ் சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து சிறு கரண்டியில் நிரப்பி, ஒரு தட்டில் வெண்ணெய் தடவி அதில் கொட்டி நடுவில் முந்திரி மற்றும் பாதாம் வைத்து அலங்கரித்து ஆறியதும் எடுத்து பரிமாறவும்.
nj 3 e1461243181701

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button