ஆரோக்கிய உணவு

கொழுப்பைக் கரைக்கும் வெண்டைகாய்! காய்கறிகளின் மருத்துவ குணங்கள்!!

கொழுப்பைக் கரைக்கும் வெண்டைகாய்!

111

வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.
வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது. இது தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவுகிறது. இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந் தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.
வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

"வழ வழ கொழ கொழ வெண்டைக்காயை யார் சாப்பிடுவார்கள்?” என்று கேட்கும் ஆசாமியா நீங்கள்? உங்களுக்காகத் தான் இந்த கட்டுரை….

வெண்டைக்காயின் வழ வழ கொழ கொழாவுக்குக் காரணம் அதில் இருக்கும் கம்(gum) மற்றும் பெக்டின்(pectin). இவை இரண்டும் ஜாம் மற்றும் ஜெல்லி களில் அவை கெட்டி படுவதற்காக பயன்படுத்தப் படுகின்றன. ஆப்பிள்,, ஆரஞ்சு பழங்களின் மேல் தோலில் பெக்டின் காணப் படுகிறது. இவையிரண்டும் சொல்யுபில் பைபர் (soluble fiber) அதாவது கரையக் கூடிய நார்சத்து. இவை சீரம் கொலஸ்ட்ரால்(serum cholesterol) -ஐ குறைப்பதுடன் மாரடைப்பு நோய் வருவதையும் குறைக்கின்றன.

வெண்டைக்காயில் பாதிக்கு மேல் சொல்யுபில் பைபர் இருக்கிறது. மறு பாதியில் இன் சொல்யுபில் பைபர் (insoluble fiber) அதாவது உணவு செரிமானத்திற்கு பின் கரையாதது. இந்த வகை நார் சத்து குடலை ஆரோக்கியமாக வைக்கிறது. மலக்குடலில் உண்டாகும் புற்று நோய் வராமல் காக்கிறது.

வெண்டைக்காயில் இருக்கும் உயர்ந்த வகை நார் சத்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவை ஒரே நிலையில் வைக்க உதவுகிறது. வெண்டைக் காயில் இருக்கும் கம் (gum) கொலஸ்ட்ராலை கட்டுப் படுத்தி பித்த அமிலத்தால் எடுத்து செல்லப்படும் நச்சுப் பொருட்களை வடிகட்டவும் உதவுகிறது.

வெண்டை காயில் இருக்கும் கொழ கொழ சத்து குடலுக்கு இதத்தை அளிப்பதுடன், வேண்டாத கழிவுகளை வெளியேற்றவும் உதவி செய்கிறது.

மேற் சொன்ன செயல்களைப் புரிவதால் இந்த அற்புதமான காய் பல நோய்கள் நம்மை அண்டாமல் தடுக்கிறது. எந்த விதமான நச்சுப் பொருட்களும் இதில் இல்லவே இல்லை. சாப்பிடுவதால் பக்க விளைவுகளும் கிடையாது. சுலபமாக குறைந்த விலையில் கிடைக்கிறது.
நம் உடலில் இருக்கும் நல்ல பாக்டீரியா கிருமிகளையும் ஊக்குவிக்கிறது.

இதில் இருக்கும் போஷாக்குகள் முழுவதும் நமக்குக் கிடைக்க வேண்டுமானால் இதை கொஞ்சமாக சமைக்க வேண்டும். மிதமான தீயில் அல்லது ஆவியில் வேகவைப்பது நல்லது. சிலர் இதனைப் பச்சையாகச் சாப்பிடுகிறார்கள்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் இரவு ஒரு இளம் வெண்டை காயை நீரில் ( மேல் அடிக் காம்புகளை நீக்கிவிட்டு)ஊறப் போட்டு அதிகாலை எழுந்தவுடன் அந்நீரைக் குடித்துவிட்டு காயையும் மென்று தின்ன வேண்டும். தொடர்ந்து செய்தால் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும்.

அசிடிட்டி இருப்பவர்கள் தினமும் 6 வெண்டைக் காய்களை சாப்பிட்டு வந்தால் அசிடிட்டி குறையும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக் காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button