ஆரோக்கிய உணவு

அழகான சமையலறைக்கு….

வீட்டிலேயே பெண்கள் மிகவும் அதிக நேரம் இருக்கும் இடம் என்றால் அது கிச்சன் தான். ஏனெனில் காலை எழுந்தவுடன் காபி போடுவது, டிபன் தயாரிப்பது, மதிய உணவு, இரவு டின்னர் என குடும்ப உறுப்பினர்களுக்கு சமைத்து பரிமாறுவது பெண்கள் தான்.
வீட்டில் இருக்கும் பெண்களானாலும் சரி, வேலைக்கு செல்லும் பெண்களானாலும் சரி கிச்சன் மட்டும் அவர்களுக்கான தனி பொறுப்பாகவும், கூடுதல் பொறுப்பாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு சிறு வேலைகளை வீட்டில் உள்ளர்கள் பகிர்ந்து கொண்டாலும் சமையல் என்பது முழுக்க முழுக்க பெண்களையே சார்ந்ததாக உள்ளது.

வீட்டில் இருக்கும் குழந்தைகள், பெரியவர்கள், கணவர் என ஒவ்வொருக்கும் பிடித்த உணவை சமைத்து அவர்களை மகிழ்விக்கும் பெண்களுக்கு பிரதானமாக அமைவது கிச்சன் மட்டுமே…… எனவே வீட்டில் எந்த அறை எப்படி இருந்தாலும் அவர்களுக்கு பிரச்னை இல்லை. முக்கியத்துவம் வாய்ந்த கிச்சனை மட்டும் அழகாகவும், அவர்கள் விருப்பத்துக்கு ஏற்றார்போலவும், அவர்களுக்கு வசதியானதாகவும் அமைத்து தருவது மிகவும் அவசியமாகும்.

சமையலறையில் எந்த பொருளை எந்த இடத்தில் வைத்தால் சுலபமாக இருக்கும், பிரிட்ஜ் எங்கே வைக்க வேண்டும், பாத்திரங்களை கழுவும் சிங்க் எங்கே அமைக்க வேண்டும், ஸ்டோர் ரூம் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து எல்லாம் அவர்கள் நிறைய பிளான் போட்டு இருப்பார்கள்.

போதுமான இடம்: சமையலறை அழகாக காட்சியளிப்பதற்கு அங்குள்ள இடத்தை சரியான முறையில் பயன்படுத்துவது முக்கியமாகும். ஊற்றிவிடுவது, சிந்துவது, கொட்டுவது, சூடான பாத்திரத்தில் கை, கால்களை சுட்டுக் கொள்வது போன்றவை ஏற்படும். இதனை தவிர்க்க போதிய இடம் விடுவது மிகவும் அவசியமானது ஆகும். பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் இல்லாத வீடுகளே இல்லை. எனவே சமையலறையில் இவற்றால் இட நெருக்கடியோ, இடித்துக்கொள்வது போன்றவை ஏற்படாதவாறு பிரத்யேக இடம் இருக்க வேண்டும்.

கப்போர்டுகள்: சமையலறை நாகரிகம் என்னவென்றால், சமையலை முடித்து விட்டு வெளியில் வந்த பிறகு, யாராவது அந்த சமையலறையைப் பார்த்தால், இங்கு சமையல் செய்கிறார்களா என்று கேட்க வேண்டும். அப்படி கிளீனாக சமையலறை இருக்கவேண்டும். அதற்கு உதவுபவைதான் கப்போர்டுகளும் டிராயர்களும். அனைத்து பொருட்களும் இதற்குள்தான் இருக்கவேண்டும். இதுதான் பேஷன்.

கிச்சன் சிங்க்: சின்னச்சின்ன சாமான்களை கழுவ ஒவ்வொரு தடவையும் வெளியில்போக முடியாது. சமையல் மேடை அருகிலேயே ஒரு சிங்க் வேண்டும்.

வெளிச்சம்: சமையலறைக்கு தேவை நல்ல வெளிச்சமாகும். பகல் நேரங்களில் சூரிய வெளிச்சம் இருக்கும் வகையில் அமைத்தால் நன்றாக இருக்கும். இரவு நேரங்களில் ஒவ்வொரு இடமும் அதாவது, கிச்சன் மேடை, சிங்க், கப்போர்ட் என அனைத்து இடங்களிலும் வெளிச்சம் இருக்கும் வகையில் லைட்டுகளை அமைக்க வேண்டும்.

பவர் பாயின்டுகள்: மிக்சி, எலெக்ட்ரிக் கிரைண்டர் முதலியவை அனைத்து வீடுகளிலும் சகஜமாகி விட்டன. அவைகளைப் பொருத்த, நல்ல பாதுகாப்பான பவர் பாயின்டுகள் அவசியம்.’

காற்றோட்டம்: சமையலறைக்கு மிகவும் தேவையான விஷயம் காற்றோட்டம். காற்றோட்டமான விசாலமான சமையலறைகள் பார்ப்பதற்கு அழகிய தோற்றத்தை தரும். எனவே கிச்சனில் ஜன்னல் அல்லது வென்டிலேட்டர் அமைக்க வேண்டும். இதன் மூலம் சமைக்கும்போதுநெடி ஏற்படுவது, சமைத்த பொருளின் வாசனை கிச்சனிலேயே இருப்பது போன்றவை தவிர்க்கப்படும். எக்சாஸ்ட் பேனுக்கு பதிலாக சிம்னி அமைத்துக்கொள்ளலாம்.

சுவரில் டைல்கள்: தரையிலிருந்து சீலிங்க் வரைக்கும் டைல்ஸ் ஒட்டிவிட்டால் சமையலறையை சுத்தம் செய்வது சுலபம்.

சுத்தமான குடிநீர்: சுத்தமான குடிதண்ணீர் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியம். இதனால் கிச்சனில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி பொருத்தவேண்டும்.

குப்பைத்தொட்டி: சிலர் சமையலறையில் தேவயைற்ற குப்பைகளை எங்கே போடுவதுஎன தெரியாமல் ஆங்காங்கே போட்டுவைத்து இருப்பார்கள். இது பார்ப்பவரை முகம் சுளிக்க வைக்கும். இதனை தவிர்-க்க கிச்சனில் குப்பைத்தொட்டி வைக்க வேண்டும்.

பேக்ஸ்பிளாஸ்: சிங்கில் குழாய் இருப்பதால் பாத்திரங்களை கழுவும்போது தண்ணீர் அருகில் உள்ள பகுதியில் தெறிக்கும். இதனை தவிர்க்க பேக்ஸ்பிளாஸ் அமைத்தால் நன்றாக இருக்கும்.இதனை பராமரிப்பதும் மிகவும் எளிது. சமையலறையில் பாத்திரங்கள், சமையலுக்கு பயன்படும் பொருட்கள் மற்றும் கொள்கலன்கள் போன்றவற்றை பார்ப்பதற்கு அழகாகவும், முறையாகவும் அடுக்கி வைத்தல் அவசியம். சமையலறை அலமாரிகளில் பொருட்களை அடுக்கும் போது, பொதுவாக சமையலுக்கு தேவையான பொருட்களை எளிதாக எடுப்பதற்கு ஏற்பவும், சுத்தமாகவும், முறையாகவும் அடுக்கப்பட வேண்டும்

டிஸ்வாஷர்: குறைவான மின்சாரம், குறைந்த தண்ணீர் டிடர்ஜெட் பயன்பாட்டில் செயல்படும் டிஷ்வாசர் தற்போது அனைத்து பெண்களாலும் விரும்பப்படும் மற்றொரு சிறப்பம்சமாகும்.
ld1901

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button