34.9 C
Chennai
Sunday, May 11, 2025
hings to look for buying for bride saree
மணப்பெண் அழகு குறிப்புகள்

மணப்பெண்ணுக்கு புடவை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை

திருமணம் என்கிற நிகழ்வில் மணப்பெண்தான் ஹீரோயின். அத்தனை பேரின் பார்வையும் கவனமும் அவள் மீதுதான் இருக்கும்.

மணப்பெண்ணுக்கு புடவை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை
திருமணத்தில் துணைவன், துணைவி எவ்வளவு முக்கியமோ, அதுபோல மணமகன், மணமகளின் உடையும் பார்க்கிறவர்களை கவர வேண்டும் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள்.

அதற்கு, நாம் சரியான புடவைகளை தேர்வு செய்ய வேண்டும். தன்னுடைய நிறத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்ய வேண்டும். திருமணம் என்கிற நிகழ்வில் மணப்பெண்தான் ஹீரோயின். அத்தனை பேரின் பார்வையும் கவனமும் அவள் மீதுதான் இருக்கும். கொஞ்சம் அலட்சியமாக இருந்தாலும், அடுத்தவர் கண்களை உறுத்தும். திருமணத்துக்கான புடவை முதல் மேக்கப் வரை பார்த்துப் பார்த்துத் செய்வார்கள்.

என்னதான் இன்றைய திருமணங்களில் நாகரிக மோகம் தலை நீட்டினாலும் இன்னமும், முகூர்த்தத்துக்கு மட்டும் பாரம்பரிய உடை மற்றும் நகைகளைத் தான் பலரும் விரும்புகிறார்கள். திருமணத்துக்கு முன்பே மேக்கப், ஹேர் ஸ்டைல் எல்லாம் பொருத்தமாக இருக்கிறதா என, இன்றைய மணப்பெண்கள் ட்ரையல் பார்க்கிறார்கள். அதே போல புடைவைகளையும் பார்க்கலாம்.

அதற்கு முன் திருமணச் சடங்குகள் அனைத்துக்கும் பொருந்தக்கூடிய மேட்சிங் புடவைகளை தேர்வு செய்ய வேண்டும். திருமணத்துக்கான புடவைகள் வாங்கும் போது கூடியவரையில் ஏற்கனவே, தயாராக உள்ள மாடல்களில் இருந்து தேர்ந்தெடுக்காமல், புதிய மாடலில் தேர்வு செய்யலாம்.

ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள் எடை குறைவானதும், கற்கள் பதித்த புடவைகளை தேர்ந்தெடுக்கலாம். கூடிய வரையில் திருமணத்துக்கான புடவைகளையும் நகைகளையும் பகல் நேர வெளிச்சத்தில் தேர்ந்தெடுப்பதே சரியானது. டபுள் ஷேடு புடவைகள் பகல் வெளிச்சத்தில் ஒரு மாதிரியாகவும், இரவு வெளிச்சத்தில் வேறு மாதிரியும் தெரியும். ஆதலால், புடவையையும் நகையையும் பகல் நேரத்தில் பார்த்து வாங்கினால் சரியாக அமையும். முகூர்த்தத்துக்கு பெரும்பாலும் மெரூன், பச்சை அல்லது மாம்பழ கலர் புடவை அணிவார்கள்.

திருமணம் என்பது சென்டிமென்ட்டுகள் நிறைந்த ஒரு சடங்கு என்பதால், மணப்பெண்களுக்கு வாங்கும் புடவைகளில், அதிக அக்கறை காட்டுவார்கள். தாம் கட்டிய புடவை இதுவரை யாரும் கட்டிருக்க கூடாது என்று, எல்லோரும் நினைப்பது இயல்பு. பழமைக்கும், புதுமைக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்களுக்கு, இரண்டும் கலந்த புது டிசைன்களில் இன்று, நிறைய புடவைகள் வந்திருக்கின்றன என்பது மகிழ்ச்சியே.

ஆடம்பர வேலைப்பாடு செய்த புடவைகளுக்கு அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் இன்றைய பெண்கள். ஆனால், மணப்பெண்களுக்காக புடவை வாங்கும் போது, அவர்களது வசதிக்கேற்ப அதாவது, அவர்களது நிறம், உடல் வாகு, போன்றவற்றின் அடிப்படையில் வாங்கினால் சரியாக இருக்கும்.
hings to look for buying for bride saree

Related posts

பெண்ணிற்கு ஆண்கள் கொடுக்க கூடிய 7 டிப்ஸ்!…

sangika

A Bride Reception Saree for Every Style | ஒவ்வொரு ஸ்டைலுக்கும் ஏற்ற மணமகள் வரவேற்பு சேலை

nathan

திருமணத்தின் போது மணமகள் அழகாக தோற்றமளிக்க…:

nathan

நெற்றியில் திலகம் இடுவது ஏன்?

nathan

Azhagu Aayiram |31/03/2016 | Puthuyugam TV

nathan

மருதாணி … மருதாணி…

nathan

மணப்பெண்ணாக போகும் அனைவரும் அழகை அதிகரிக்க சிறப்பான சில சந்தன ஃபேஸ் பேக்!!!

nathan

பட்டுப் புடைவைகளை பாதுகாப்பது எப்படி? இதோ சில ஐடியாக்கள்…

nathan

மெஹந்தி அதிக நாட்கள் நிறம் மாறாமல் இருக்க

nathan