ஆரோக்கிய உணவு

வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட பிரபல இந்திய உணவுப் பொருட்கள் – அதிர்ச்சி தகவல்!!!

மேகி தடை செய்யப்பட்டதில் இருந்து, கடந்த ஒரு மாத காலமாக உணவிப் பொருட்கள் தடை குறித்தும், உணவுப் பொருட்களின் தரம் குறித்தும் பல செய்திகள் தினமும் வெளிவந்த வண்ணமாக உள்ளன. நெஸ்ட்லேவின் பால் பவுடர் மற்றும் காம்ப்ளேனில் நெளிந்த புழு, பூச்சிகளும், இதே சமயத்தில் கோவை நகரில் எழுந்தது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதே போல, கடந்த வாரம் இந்திய உணவுப் பொருட்களில் கலக்கப்படும் இரசாயனங்கள் மனிதர்கள் சாப்பிட உகந்தது அல்ல என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக துறையான எப்.டி.ஏ ஓர் அறிக்கையை வெளியிட்டு மற்றுமொரு பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்போது, நாம் யாரும் அறிந்திடாத, வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட, இந்தியாவில் பிரபலமாக விளம்பரப்படுத்தி விற்கப்படும் உணவுப் பொருட்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன…

ஷியாவன்பிராஷ் (Chyawanprash)

உடல் சத்தை அதிகரிக்க உதவும் உணவென இந்தியாவில் பிரபலமாக விற்கப்படும் பொருளான ஷியாவன்பிராஷ் (Chyawanprash) எனும் உணவை கடந்த 2005 ஆண்டு கனடா நாட்டு அரசாங்கம் தடை செய்ததாம். இந்த உணவில் அதிகமான லேட் மற்றும் எம்எஸ்.ஜி. இருந்தது தான் இதற்கான காரணம் என்றும் இதனால் உடல்நலத்திற்கு பதிப்பு ஏற்படும் என்றும் கனடா அரசு கூறியுள்ளது.

20 1434786800 1popularindianproductsbannedabroad

பெயரற்ற சிறுதீனி உணவுப் பொருள்

கடந்த 2015 பிப்ரவரி மாதம், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்து சரியான பெயரிடப்படாத சிறுதீனி உணவுப் பொருளில் நிறைய கலப்படமும், தரமற்ற உட்பொருட்களும் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்தது என்று காரணம் கூரை தடை செய்யப்பட்டது.

20 1434786806 2popularindianproductsbannedabroad

ஹல்திரம்ஸ்

இந்தியாவின் முன்னணி சிறுதீனி மற்றும் இனிப்பு வகை உணவுத் தயாரிப்பு நிறுவனமான "ஹல்திராம்ஸ்", மனிதர்கள் உண்ண தகுந்தது அல்ல என அமெரிக்க உணவு நிர்வாகம் தடைவிதித்தது.

நெய் பொருட்கள்

நெய் இன்றி இந்திய உணவு சாத்தியமற்றது. ஆனால், அமெரிக்காவில் இது மிகவும் பிடித்ததாக தெரியவில்லை. ஆதலால், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், கடந்த பிப்ரவரி மாதம் நெய் மற்றும் வெண்ணெய் எண்ணெய் பொருட்களின் ஏற்றுமதிக்கு தடைவிதித்தது. உணவுப் பொருள் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து உட்பொருளின் உள்ளடக்கமும் கவரில் அச்சடிக்கப்படவில்லை என்பதே இதற்கான காரணமாக கூறப்படுகிறது. இதே போன்று சீனாவின் Heinz’ எனும் பால் பொருள் தயாரிப்பு பொருட்களையும் எப்.டி.ஏ தடை செய்தது என்பது குறிபிடத்தக்கது.

மேகி

இந்தியாவில் மேகி தடைசெய்யப்பட சில நாட்களிலேயே, நமது அண்டை நாடுகளிலும், அமெரிக்காவிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேகி உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டது.

20 1434786823 5popularindianproductsbannedabroad

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button