முகப்பரு

பருக்கள் இல்லாத முகத்தைப் பெற தினமும் பின்பற்ற வேண்டியவைகள்!

வெயில் காலத்தில் அதிகப்படியான சூட்டினாலும், எண்ணெய் பசை சருமத்தினாலும் பருக்கள் அதிகமாக வரும். அதுமட்டுமின்றி, நமது சில ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களான முகத்தில் அதிகம் கைகளை வைப்பது, தலைமுடி முகத்தில் படுமாறு முடியை முன்னே எடுத்து போட்டுக் கொள்வது போன்றவற்றாலும் பருக்கள் வரும்.

அழகு நிபுணர்களோ, தினமும் ஒருசில செயல்களை பின்பற்றுவதன் மூலம், முகத்தில் பருக்கள் வருவதைத் தடுக்கலாம் எனக் கூறுகின்றனர். மேலும் எந்த ஒரு காலத்திலும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுப்பதன் மூலம் பருக்கள் வருவதைத் தடுக்கலாம் என சொல்கின்றனர்.

இங்கு பருக்கள் இல்லாத சுத்தமான முகத்தைப் பெற சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை அன்றாடம் பின்பற்றினால், நிச்சயம் அழகான முகத்துடன் திகழலாம்.

சோப்பை தவிர்க்கவும

் முகத்திற்கு சோப்பை அதிகம் பயன்படுத்தக்கூடாது. அதிலும் ஒரு நாளைக்கு ஒருமுறைக்கு மேல் சோப்பு பயன்படுத்தக்கூடாது. மாறாக மற்ற நேரங்களில் பால் கொண்டு முகத்தை துடைத்து எடுக்கலாம் அல்லது சந்தனம் தடவி 10 நிமிடம் கழித்து தேய்த்து கழுவலாம். இதனால் சரும ஆரோக்கியம் மேம்படும்.

டோனர்

தினமும் இரவில் முகத்தை நீரில் கழுவிய பின், ரோஸ் வாட்டர் அல்லது பன்னீரைக் கொண்டு முகத்தைத் துடைத்து எடுங்கள். இதனால் சருமத்துளைகளின் ஆழத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறி, முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக இருக்கும்.

டூத் பேஸ்ட்

முகத்தில் சீழ் கொண்ட பருக்கள் இருந்தால், அதன் மேல் சிறிது டூத் பேஸ்ட்டை வையுங்கள். இதனால் அது உலர்ந்து மறைந்துவிடும்.

முகத்தைக் கழுவவும்

கோடையில் சரும பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் முகத்தை மூன்று முறை சோப்பு பயன்படுத்தாமல் கழுவ வேண்டும். அதுவும் குளிர்ச்சியான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் வரும் பருக்களுக்கு காரணமான அழுக்குகளின் அளவைக் குறைக்கலாம்.

பழங்களால் பராமரிப்பு

அதேப் போல் கோடையில் நீர்ச்சத்து நிறைந்த பழங்களாலும் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க வேண்டும். இப்படி தினமும் ஏதேனும் ஒரு பழத்தால் பராமரிப்பு கொடுத்தால், பருக்களின் வளர்ச்சி தடுக்கப்படும்.

ஃபேஸ் மாஸ்க்

கோடையில் மாதத்திற்கு மூன்று முறையாவது ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும். இதனால் சருமத்திற்கு போதிய பராமரிப்பு கொடுத்தாற் போன்று இருக்கும். மேலும் சருமத்தின் ஆரோக்கியமும், நிறமும் மேம்பட்டு காணப்படும்.

சந்தனம்

முக்கியமாக தினமும் முகத்திற்கு சந்தனத்தைத் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் சந்தனம் முகத்தில் பருக்கள் வருவதைத் தடுப்பதோடு, முகத்தில் உள்ள தழும்புகளையும் மறைக்கும்.

20 1461132411 4 facewash

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button