முகப் பராமரிப்பு

கோடை காலத்தில் அதிகரிக்கும் எண்ணெய் பசை சருமத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது

உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், அவர்கள் தங்களின் சருமத்தில் உள்ள எண்ணெயை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

உலர்ந்த சருமம், எண்ணெய் பசை சருமம், சாதாரண சருமம் என்று உள்ளது. இதில் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு கோடை காலம் மேலும் எண்ணெய் பசையை அதிகரிக்க செய்யும். இதனால் முக அழகு கெடும்.

எண்ணெய் பசை நீங்க இயற்கை மருத்துவ குறிப்புகள் ஏராளமாக உள்ளது.

எண்ணெய் பசை சருமத்தினர் அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை அலம்ப சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால் எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும்.

சருமத்திற்கு எப்போதும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தும் போது, சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

* மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் வழிவது குறையும். சோளமாவுடன் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தின் எண்ணெய் பசை நீங்கும்.

* வெள்ளை வினிகரை நீரில் சரிசமமாக கலந்து, காட்டனில் நனைத்து, முகத்தைத் துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவோடு காணப்படும். அல்லது எலுமிச்சை சாறு தடவி சிறிது நேரம் காயவைத்து கழுவினால் முகம் பளிச்சிடும்.

* சிறிது புதினா இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க விட்டு, அந்நீரை குளிர வைத்து, பின் அதனை காட்டன் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்கலாம். இதுவும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும்.

* கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ, முகம் பளிச்சென்று இருக்கும்.

* வெள்ளரிக்காயை துருவி, அதில் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள எண்ணெய் பசை மட்டுமின்றி, அழுக்குகளும் முழுவதுமாக நீக்கப்படும்.

* ஐஸ் நீர் அல்லது ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து வர, முகத்தில் உள்ள அழுக்குகள் நீக்கப்படுவதோடு சருமத்துளைகள் இறுக்கப்பட்டு, எண்ணெய் பசை வெளிவருவதைத் தடுக்கலாம்.

* தக்காளி சாறு மற்றும் தேனை சரிசமமாக எடுத்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ, முகம் எண்ணெய் பசையின்றி பளிச்சென்று இருக்கும்.

* எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சை சாறு ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு அவற்றை நன்றாக கலக்கி, முகத்தில் பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவ வேண்டும்.

வெயில் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவான உணவுகளை சாப்பிடுவது மிக நல்லது. நீர்ச்சத்து அதிகம் கொண்ட வாழைத்தண்டு, கீரை போன்றவற்றை உண்ணுவது உடம்புக்கு நல்லது. எனவே உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் இயற்கை முறைகளை பின்பற்றுங்கள்.1461750912 5387

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button