சிற்றுண்டி வகைகள்

சுவையைக் கொண்ட மஸ்ரூம் பாப்பர்ஸ்..

தேவையான பொருட்கள்:

* காளான் – 20

* க்ரீம் சீஸ் – 1/4 கப்

* மொசரெல்லா சீஸ் – 1/2 கப்

* பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* மிளகுத் தூள் – சுவைக்கேற்ப

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

கோட்டிங்கிற்கு…

* மைதா – 1 கப்

* சோள மாவு – 1/4 கப்

* மைதா – 1/4 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

* மிளகுத் தூள் – சுவைக்கேற்ப

* பிரட் தூள் – 2 கப்

செய்முறை:1 mushroom poppers 1667393674

* முதலில் முழு காளானை எடுத்து, அதன் தண்டு பகுதியை மட்டும் நீக்கிவிட வேண்டும். அந்த தண்டு பகுதியை தூக்கிப் போடாமல், அதை பொடியாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு பௌலில் க்ரீம் சீஸ், மொசரெல்லா சீஸ், உப்பு, மிளகுத் தூள், பூண்டு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் நறுக்கிய காளான் தண்டுகளை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு காளானை எடுத்து, அதனுள் சீஸ் கலவையை வைத்து நிரப்ப வேண்டும்.

* பிறகு ஒரு பௌலில் 1 கப் மைதா, 1/4 கப் சோள மாவு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து கலந்து, நீரை ஊற்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

Mushroom Poppers Recipe In Tamil
* பின்பு சீஸ் நிரப்பிய காளான் ஒன்றை எடுத்து, அதை மைதா மாவில் பிரட்டி, பின் நீர் ஊற்றி கலந்து வைத்துள்ள மாவில் பிரட்ட வேண்டும். அதன் பின் பிரட் தூளில் பிரட்ட வேண்டும்.

* பின்னர் மீண்டும் நீர் ஊற்றி கலந்து வைத்துள்ள மாவில் பிரட்டி, மீண்டும் பிரட் தூளில் பிரட்டி, ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து காளானையும் செய்து, ஃப்ரிட்ஜில் சில நிமிடங்கள் வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தயாரித்து வைத்துள்ள உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மஸ்ரூம் பாப்பர்ஸ் தயார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button