24.6 C
Chennai
Friday, Dec 27, 2024
1 coconut podi 1660217464
Other News

தேங்காய் மிளகாய் பொடி

தேவையான பொருட்கள்:

* துருவிய தேங்காய் -1 கப்

* உளுத்தம் பருப்பு – 1/4 கப்

* வரமிளகாய் – 10-15

* கடுகு – 1 டீஸ்பூன்

* பூண்டு – 3

* புளி – 1 சிறிய துண்டு

* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

* வெல்லம் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 1 டீஸ்பூன்1 coconut podi 1660217464

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக நிறம் மாற ஆரம்பிக்கும் போது, கடுகு, வரமிளகாய், பூண்டு, பெருங்காயத் தூள் மற்றும் புளி சேர்த்து, மிதமான தீயில் வைத்து நன்கு பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.

* பின் அதே வாணலியில் துருவிய தேங்காயை சேர்த்து குறைவான தீயில் வைத்து, அதில் உள்ள நீர் அனைத்தும் வற்றும் வரை வறுத்து இறக்கி, அதையும் குளிர வைக்க வேண்டும்.

* பின்பு வறுத்த பொருட்களுள் தேங்காயைத் தவிர அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதில் தேங்காய், வெல்லம் சேர்த்து, ஒருமுறை லேசாக அரைத்து இறக்கிவிட வேண்டும். (அதிகமாக அரைத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் அது பிசுபிசுவென்று மாறிவிடும்.)

* இப்போது அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறினால், தேங்காய் மிளகாய் பொடி தயார். இந்த பொடியை காற்றுப்புகாத ஜாரில் போட்டு சேமித்து வைத்து பயன்படுத்துங்கள்.

Related posts

கேப்டன் விஜயகாந்தின் அப்பா அம்மா புகைப்படங்கள் ………

nathan

தந்தையை இழந்த சோகத்தை பகிர்ந்த VJ பிரியங்கா

nathan

S எழுத்தில் பெயர் தொடங்குபவர்களை உங்களுக்கு தெரியுமா?அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறியவும்!

nathan

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு தமிழீழ விடுத லைப் புலி கள் இரங்கல்!

nathan

இந்திய நடிகருக்கு தபால் தலை -கௌரவித்த அவுஸ்திரேலியா!

nathan

உங்கள் பெயர் உங்களுக்கு ராசியானதாக உள்ளதா…?

nathan

பின்னழகை தூக்கி காட்டிய யாஷிகா… இதை நீங்களே பாருங்க.!

nathan

தமிழகத்தில் மட்டுமே ஜவான் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா!

nathan

உடை மாற்றுவது போன்ற போலி வீடியோ வைரல்…!ராஷ்மிகாவை தொடர்ந்து கஜோல்…

nathan