25.7 C
Chennai
Thursday, Dec 12, 2024
1 coconut podi 1660217464
Other News

தேங்காய் மிளகாய் பொடி

தேவையான பொருட்கள்:

* துருவிய தேங்காய் -1 கப்

* உளுத்தம் பருப்பு – 1/4 கப்

* வரமிளகாய் – 10-15

* கடுகு – 1 டீஸ்பூன்

* பூண்டு – 3

* புளி – 1 சிறிய துண்டு

* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

* வெல்லம் – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* எண்ணெய் – 1 டீஸ்பூன்1 coconut podi 1660217464

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து லேசாக நிறம் மாற ஆரம்பிக்கும் போது, கடுகு, வரமிளகாய், பூண்டு, பெருங்காயத் தூள் மற்றும் புளி சேர்த்து, மிதமான தீயில் வைத்து நன்கு பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும்.

* பின் அதே வாணலியில் துருவிய தேங்காயை சேர்த்து குறைவான தீயில் வைத்து, அதில் உள்ள நீர் அனைத்தும் வற்றும் வரை வறுத்து இறக்கி, அதையும் குளிர வைக்க வேண்டும்.

* பின்பு வறுத்த பொருட்களுள் தேங்காயைத் தவிர அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதில் தேங்காய், வெல்லம் சேர்த்து, ஒருமுறை லேசாக அரைத்து இறக்கிவிட வேண்டும். (அதிகமாக அரைத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் அது பிசுபிசுவென்று மாறிவிடும்.)

* இப்போது அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறினால், தேங்காய் மிளகாய் பொடி தயார். இந்த பொடியை காற்றுப்புகாத ஜாரில் போட்டு சேமித்து வைத்து பயன்படுத்துங்கள்.

Related posts

கோடிகளில் புரளும் ஹன்சிகா.. இவரின் சொத்து மதிப்பு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கேஸ் அடுப்பை கவனமாக கையாளும் வழிமுறைகள்!

nathan

ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்துக்கு காரணம் இது தான்

nathan

அடேங்கப்பா! குழந்தையின் போட்டோவை வெளியிட்ட பாடகி ரம்யா… வாழ்த்தும் ரசிகர்கள்..!

nathan

கனடா குடிவரவு கொள்கையில் மாற்றம்:எளிதில் நிரந்தர குடியுரிமை

nathan

ஓணம் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட நடிகை மீனா

nathan

பிக் பாஸிலிருந்து அதிரடியாக வெளியேறிய பெண் போட்டியாளர்…

nathan

இளசுகளை கட்டி இழுக்கும் வாணி போஜன்..!

nathan

பேத்தி திருமண வரவேற்பில் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

nathan