29.1 C
Chennai
Thursday, Dec 26, 2024
1 white sauce pasta 1660743850 1
சமையல் குறிப்புகள்

ஒயிட் சாஸ் பாஸ்தா

தேவையான பொருட்கள்:

* பாஸ்தா – 1 கப் (100 கிராம்)

* வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கியது)

* காளான் – 5-6 (நறுக்கியது)

* பச்சை பட்டாணி – 1/4 கப்

* கார்ன் – 1/4 கப்

* குடைமிளகாய் – 1/2

வெள்ளை சாஸ் செய்வதற்கு…

* வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

* மைதா – 2 டேபிள் ஸ்பூன்

* பால் – 2 கப்

* உலர்ந்த துளசி/பேசில் இலைகள் – 1/4 டீஸ்பூன்

* சில்லி ப்ளேக்ஸ் – 1/4 டீஸ்பூன்

* உப்பு மற்றும் மிளகு – சுவைக்கேற்ப1 white sauce pasta 1660743850 1

செய்முறை:

* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து சேர்த்து நீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* நீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் பாஸ்தாவை சேர்த்து, 15 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும். பாஸ்தா நன்கு வெந்ததும் நீரை வடிகட்டி விட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பூண்டு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் காளானை சேர்த்து நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

White Sauce Pasta Recipe In Tamil
* பின்பு அதில் பச்சை பட்டாணி, கார்ன், குடைமிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி 2-3 நிமிடம் வதக்க வேண்டும். காய்கறிகள் வெந்ததும், அதை ஒரு தட்டில் போட்டுவிட்டு, அந்த வாணலியை மீண்டும் அடுப்பில் வைக்க வேண்டும்.

* பிறகு அதில் சிறிது வெண்ணெய் சேர்த்து உருகியதும், மைதாவை சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் கிளறி, பின் அதில் பாலை ஊற்றி, கெட்டியாகும் வரை கிளற வேண்டும்.

* பின்னர் அதில் வதக்கி வைத்துள்ள காய்கறிகள், வேக வைத்துள்ள பாஸ்தா, துளசி இலைகள், சில்லி ப்ளேக்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி கொதிக்க வைக்க வேண்டும்.

* இறுதியாக அதன் மேல் சிறிது பார்மீசியன் சீஸ் தூவி பரிமாறினால், சுவையான ஒயிட் சாஸ் பாஸ்தா தயார்.

Related posts

சுவையான சிக்கன் சூப்

nathan

சுவையான கேரட் எலுமிச்சை சாதம்

nathan

அருமையான வெங்காய குருமா

nathan

தக்காளி வெங்காய சாம்பார்

nathan

சுவையான தயிர் கொண்டைக்கடலை சப்ஜி

nathan

பூண்டு சிக்கன் சாதம் செய்வது எப்படி?

nathan

சூப்பரான பனங்கற்கண்டு பால் பொங்கல் ரெடி!…

sangika

செட்டிநாடு பட்டாணி குருமா

nathan

சூப்பரான மீல்மேக்கர் பிரியாணி !….

sangika