ஆரோக்கிய உணவு

ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும் 5 உணவுகள்!

ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும் 5 உணவுகள்!
டெட்லைன், டார்கெட்டை ரீச் பண்ணனும்,  ப்ராஜக்டை குறிப்பிட்ட நாளில் முடிக்கணும், கஸ்டமரை தக்கவைக்கணும் என ஒவ்வொருவருக்கும் ஸ்ட்ரெஸ் இல்லாமல் இல்லை. அதற்கு தற்காலிக தீர்வாக காஃபி, சிகரெட் என்று தேடிப் போகாமல் தினமும் சில உணவுகளை சேர்த்துக் கொண்டால் எதையும் ஸ்ட்ரெஸ் ஃப்ரீயாக ஹேண்டில் செய்யலாம்…

1. பச்சைக் காய்கறிகள்

பல ஐ.டி கம்பெனிகளில் ‘கிரீன் ரூம்’ என்றிருக்கும். மிகவும் ஸ்ட்ரெஸ்ஸாக இருப்பவர்கள் சிறிது நேரம் பச்சைக் கலரை பார்த்தால் மனது ரிலாக்ஸாகும் என்பதற்காக இந்த ரூம். அதுபோலதான் பச்சை நிறக் காய்கறிகளும்.. கீரை வகைகள், ப்ராக்கோலி, அவகாடோ, வெண்டை ஆகியவற்றில் அதிகமாக ஃபோலிக் ஆசிட்  (வைட்டமின் பி9) இருக்கிறது. இது மூளையை புத்துணர்ச்சியாக வைத்து உற்சாகமாகச் செயல்பட  உதவுகிறது. நீங்கள் ‘ஷார்ட் டெம்பர்’ பேர்வழி என்றால் உங்களது டென்ஷனை குறைக்க இவை உதவும்.

2. சாக்லெட்ஸ்

சாக்லெட்டுகளில் ”ட்ரைப்டோஃபன்”  அதிகம் உள்ளது. இது உங்களை  ஃபீல் குட்டாக வைத்திருக்க உதவும். நாம் நலமாக மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதை உணர உதவுவது சொரட்டோடின் என்ற ஒரு வகை ஹார்மோன் தான். அதனை அதிகப்படுத்த உதவுவது இந்த ‘ட்ரைப்டோஃபன்” !  இவை வாழைப்பழம், முட்டை இவற்றிலும் அதிகம் உள்ளது. மேலும் இவைகளை உண்ணும்போது உங்களுக்கு நிம்மதியான தூக்கமும் கியாரன்டி!

11


3. தயிர்

சிலர் செரிமானப் பிரச்னைகளாலே மிகவும் அப்நார்மலாக இருப்பார்கள். தயிரில் ”ப்ரோபயோட்டிக்” என்று சொல்லப்படும் குட் பேக்டீரியா உள்ளது. இது நல்ல செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் சின்ன விஷயத்திற்குக்கூட ஓவராக எமோஷனலாகும் நபர்களுக்கு தினமும் உணவில் தயிரை சேர்த்துவர எமோஷனலை கட்டுப்படும்.

4. பால்

எதற்கெடுத்தாலும் சிலர் பயப்படுவார்கள். ஒன்றும் நடக்காமல் இருக்கும்போதே ஏதோ விபரீதம் நிகழப்போவதாக எண்ணி, டென்ஷன் ஆவார்கள். இந்த ”பேனிக் டிசார்டர்” க்கு பால் மிகவும் நல்லது. பாலில் உள்ள வைட்டமி டி உங்களை மகிழ்ச்சியாக இருக்க உதவுவதோடு பேனிக் டிசார்டரில் இருந்தும் மீட்டெடுக்கும்.

5. ஒமேகா – 3

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க இந்த ஒமேகா – 3 உதவுகிறது. காரணம் தெரியாமல் ஏற்படும் எரிச்சல், கோவத்தை கட்டுப்படுத்த உதவும் இந்த ஒமேகா – 3, கடல் மீன், ஃப்ளக்ஸ் சீட்ஸ் களில் அதிகம் உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button