24.6 C
Chennai
Friday, Dec 27, 2024
pattani kurma 1672758928
Other News

சுவையான… பட்டாணி குருமா

தேவையான பொருட்கள்:

* பட்டாணி – 1 கப் (நீரில் 5 மணிநேரம் ஊற வைத்தது)

* பட்டை – 1 இன்ச்

* கிராம்பு – 3-4

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* தக்காளி – 1 (நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

* சோம்பு தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்

* தேங்காய் பால் – 1/2 கப்

* உருளைக்கிழங்கு – 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)

* எண்ணெய் – தேவையான அளவு

* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிதுpattani kurma 1672758928

செய்முறை:

* முதலில் ஊற வைத்த பட்டாணியை நன்கு நீரில் கழுவி, குக்கரில் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, சிறிது உப்பு போட்டு அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் தக்காளியை போட்டு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு பிரட்டி, சிறிது நீரை ஊற்றி, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

* உருளைக்கிழங்கு முக்கால்வாசி வெந்ததும், வேக வைத்துள்ள பட்டாணியை சேர்த்து கிளறி, சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் அதில் சோம்பு பொடியை சேர்த்து, தேங்காய் பாலை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால் சுவையான பட்டாணி குருமா தயார்.

Related posts

நவம்பர் மாத – ராசி பலன்கள் 2023

nathan

வெள்ளிக்கிழமையில் கண்டிப்பா உப்பு வாங்குங்க… அதிர்ஷ்டம்

nathan

கவர்ச்சி உடையில் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்..!

nathan

நடிகை பிரியா பவானி ஷங்கர் நச் போட்டோஸ்..!

nathan

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ டீசர்

nathan

பிரபல நடிகை தவறான முடிவு.. அதிர்ச்சியில் திரையுலகம்!

nathan

பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்..விசித்ரா உடைத்த உண்மைகள்.!!

nathan

பழம்பெரும் நடிகை சுப்பலட்சுமி காலமானார் – பீஸ்ட் படத்தில் நடித்தவர்..

nathan

தளபதி 68 திரைப்பட பூஜை வீடியோ

nathan