தலைமுடி சிகிச்சை

கைவிரல் நகங்களைத் தேய்த்தால் தலைமுடி உதிர்வதைத் தடுக்கலாம் என்பது தெரியுமா?

தலைமுடி உதிர்வதற்கு எத்தனையோ மருத்துவர்களை நாடி, அவர்கள் கொடுக்கும் மருந்துகள் மற்றும் எண்ணெய்களைப் பின்பற்றி இருப்போம். ஆனால் அந்த தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் கைவிரல் நகங்களைத் தேய்ப்பது.

என்ன நம்ப முடியவில்லையா? உண்மையிலேயே கைவிரல் நகங்களைத் தேய்ப்பதன் மூலம் தலைமுடி உதிர்வதைத் தடுப்பதோடு, முடியின் வளர்ச்சியையும் தூண்டலாம். சரி, இப்போது அந்த வழிமுறை பற்றியும், அதனால் கிடைக்கும் வேறுசில நன்மைகள் குறித்தும் காண்போம்.

செய்யும் முறை *
23 1448265471 1 rubbing nails
படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு கைவிரல்களை மடித்து, விரல்நகங்கள் ஒன்றோடொன்று தொட்டுக் கொள்ளுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். * பின் முன்னும், பின்னும் என கைவிரல் நகங்களை 5-10 நிமிடம் தேய்க்க வேண்டும். * இந்த முறையை 5-10 நிமிடம் என ஒரு நாளைக்கு 2-3 முறை செய்து வர வேண்டும்.

எப்படி?

கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது, நகத்திற்கு அடியில் உள்ள நரம்பானது மயிர்கால்களுடன் இணைக்கப்பட்டிருப்பதால், அப்பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, இரத்த ஓட்டமானது ஸ்கால்ப்பில் அதிகமாக தூண்டப்படுகிறது. ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் போது, மயிர்கால்கள் வலிமையடைந்து, முடி உதிர்வது தடுக்கப்படும்.

நன்மைகள்

இந்த வழிமுறையின் மூலம், முடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, நரைமுடி வருவதும் தடுக்கப்படும். மேலும் நகங்களை ஒன்றோடொன்று தேய்க்கும் போது, முடியின் இயற்கை நிறம் தக்க வைக்கப்படும். முக்கியமாக வழுக்கைத் தலை உள்ளவர்கள், இந்த செயலை தினமும் செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆனால் இதற்கு ஒரு வருட காலமாவது ஆகும்.

பெருவிரல் கூடாது

கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது கட்டைவிரலைப் பயன்படுத்தக்கூடாது. ஒருவேளை அப்படி பயன்படுத்தினால், மீசை, தாடி போன்றவை வளர ஆரம்பிப்பதோடு, காதுகளிலும் முடி வளர ஆரம்பிக்கும். Show Thumbnail

அறுவை சிகிச்சையெனில் கூடாது

அறுவை சிகிச்சையை மேற்கொண்டிருந்தால், முக்கியமாக அப்பெண்டிக்ஸ், ஆன்ஜியோகிராபி போன்றவை எனில், இச்செயலைத் தவிர்த்திடுங்கள்.

மகப்பேறு காலத்தில் கூடாது

மகப்பேறு காலத்தில் நகங்களைத் தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதன் மூலம் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் மற்றும் கருப்பையில் இறுக்கம் ஏற்படக்கூடும்.

உயர் இரத்த அழுத்தமெனில் கூடாது

உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால், இந்த செயலைச் செய்யாதீர்கள். ஏனெனில் இச்செயலின் மூலம் இரத்த அழுத்தம் இன்னும் அதிகரிக்கும்.

கடுமையாக செய்யக்கூடாது

கைவிரல் நகங்களைத் தேய்க்கும் போது மிகுந்த வேகத்திலோ அல்லது கடுமையாகவோ செய்யக்கூடாது. அப்படி செய்தால், விரல்நகங்கள் தான் பாதிக்கப்படும்.

நோய்த்தொற்றுக்கள் என்றால் கூடாது

கைவிரல் நகங்களில் ஏதேனும் தொற்றுக்கள் ஏற்பட்டிருந்தால், இச்செயலைச் செய்யாதீர்கள்.

குறிப்பு

முக்கியமாக இச்செயலை 10 நிமிடத்திற்கு மேல் செய்யக்கூடாது மற்றும் ஒரு நாளைக்கு 3 முறைக்கு மேல் செய்யக்கூடாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button