30.8 C
Chennai
Sunday, May 11, 2025
p34a
சமையல் குறிப்புகள்

டிப்ஸ்… டிப்ஸ்…

பலவிதத்திலும் பயன்படும் ‘எமர்ஜென்ஸி மாவு’ செய்ய ஓர் எளிய வழி… இரண்டு டம்ளர் கடலைப் பருப்பு, ஒரு டம்ளர் துவரம்பருப்பு, 10 மிளகாய் வற்றல் ஆகியவற்றை மிக்ஸியில் ரவை போல பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். பருப்பு உசிலி செய்ய நினைக்கும்போது, தேவையான அளவு எடுத்து, உப்பு போட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டுப் பிசிறி வையுங்கள். குக்கரில் காயை வேகவைக்கும்போது, இந்தக் கலவையையும் தனியே வேகவிட்டு, பருப்பு உசிலி தயாரித்துவிடலாம். இந்த மாவுடன் தண்ணீர் சேர்த்துப் பிசைந்து வடை தட்டலாம். இதனுடன் கொஞ்சம் அரிசி நொய் சேர்த்து ஊறவைத்து, அடை வார்க்கலாம்.

p34a

எண்ணெய்ப் பிசுக்குள்ள பாத்திரங்களைச் சுத்தம் செய்ய ஓர் எளிய வழி… பாத்திரத்தினுள் சில ஐஸ் க்யூப்களைப் போட்டு நன்றாகக் குலுக்குங்கள். பின்னர் க்யூப்களைக் கொட்டிவிட்டு, வழக்கம்போல் சிறிது லிக்விட் கொண்டு பாத்திரத்தைத் தேய்த்து விட்டால், எண்ணெய் இருந்த சுவடே தெரியாது.

சட்டென்று மில்க்‌ ஷேக் தயாரிக்க வேண்டுமா? ஒரு வாழைப்பழத்தை எடுத்து நன்கு மசியுங்கள். வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி, அதில் மசித்த வாழைப்பழம் மற்றும் ஒன்று அல்லது ஒன்றரை டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, அது கரையும் வரை கிளறவும். சற்று ஆறியதும், ஒரு கப் காய்ச்சி குளிர வைத்த பாலில் இரண்டு டேபிள் ஸ்பூன் வாழைப் பழக் கலவையைக் கலந்தால்… ருசியான மில்க்‌ ஷேக் ரெடி.

p34c

பைகளில் உள்ள ஜிப்புகள் திறப்பதற்கு கஷ்டமாக இருக்கும்போது ஜிப் மீது மெழுகுவத்தியைத் தேய்ப்போம். முதலில் மெழுகின் முனையில் எண்ணெயைத் தடவி விட்டு, பிறகு மெழுகை ஜிப்பின் மீது நீளமாகத் தேய்த்தால், ஜிப் இன்னும் சுலபமாக திறக்க வரும்.

p34d(1)

காலையில் காபிக்கு டிகாக்‌ஷன் போடும்போதே, கொஞ்சம் கூடுதலாக வெந்நீர் கொதிக்கவைத்து, அன்று வேகவைக்க வேண்டிய பருப்பு, புளி முதலியவற்றை ஊற வைத்தால், சமைக்கும்போது பருப்பு எளிதாக வேகும். புளியும் கரைக்க சுலபமாக இருக்கும்.

Related posts

சுவையான மலபார் அவியல்

nathan

சுவையான இறால் முட்டை பொடிமாஸ் செய்து சாப்பிடுங்க

nathan

சுவையான சின்ன வெங்காய குழம்பு

nathan

காரசாரமான… சில்லி ராஜ்மா

nathan

ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு

nathan

காலிஃப்ளவர் குருமா!

nathan

KONDAKKADALAI SUNDAL/ கொண்டைக்கடலை சுண்டல்

nathan

சுவையான மிளகு அவல்

nathan

பச்சை பயறு கடையல்

nathan